Atal Pension Yojana: மாதம் ரூ. 10,000 ஓய்வூதியம் கிடைக்குமா? அரசு அளித்த பதில் இதோ

Atal Pension Yojana: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் ஓய்வூதியத்தை அதிகரிக்க PFRDA மூலம் ஒரு முன்மொழிவு அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2023, 05:14 PM IST
  • அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக இந்த திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
  • தற்போது, ​​திட்டத்தில் முதலீடு செய்ய ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை 5 ஓய்வூதிய அடுக்குகள் உள்ளன.
  • இதன் உச்ச வரமை ரூ. 10,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Atal Pension Yojana: மாதம் ரூ. 10,000 ஓய்வூதியம் கிடைக்குமா? அரசு அளித்த பதில் இதோ title=

அடல் ஓய்வூதியத் திட்ட விதிகள்: அடல் ஓய்வூதியத் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் மத்திய அரசு கடந்த சில நாட்களில் சில மாற்றங்களை செய்துள்ளது. அக்டோபர் 1 முதல் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களின்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் அனைவரும் அடல் பென்ஷன் யோஜனாவில் பங்களிக்க முடியாது. அதன்பின் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) நிதி அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இப்போது அரசு தரப்பிலும் இதற்கான பதில் வந்துள்ளது.

ஓய்வூதிய தொகையை உயர்த்தவில்லை

அரசு அளித்த பதிலில், அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க முன்மொழியப்பட்ட திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதிய தொகை உயர்த்தப்படவில்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார். மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த பகவத் காரத், அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகையை அதிகரிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

கணக்கு வைத்திருப்பவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்

ஓய்வூதியத் தொகையை அரசு உயர்த்தினால், அது நேரடியாக கணக்கு வைத்திருப்பவர்களை பாதிக்கும் என்று பகவத் காரத் கூறினார். ஓய்வூதியத் தொகையை அதிகரித்தால் அதன் மூலம் கணக்கு வைத்திருப்பவர்கள் செய்யும் முதலீட்டின் தவணையும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் மீது கூடுதல் சுமை ஏற்படும். 

மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் ஊழியர்களுக்கு 2 மாஸ் அறிவிப்புகள், தயாராகும் அரசு!!

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் ஓய்வூதியத்தை அதிகரிக்க PFRDA மூலம் ஒரு முன்மொழிவு அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரையிலான ஓய்வூதிய அடுக்குகள்

அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக இந்த திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. தற்போது, ​​திட்டத்தில் முதலீடு செய்ய ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை 5 ஓய்வூதிய அடுக்குகள் உள்ளன. இதன் உச்ச வரமை ரூ. 10,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், அத்தகைய நடவடிக்கையை எடுக்க அரசு மறுத்துவிட்டது. 

விதிகளின்படி, 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எவரும் (வருமான வரி செலுத்துவோர் தவிர) அரசின் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து, 60 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியம் பெறலாம்.

மேலும் படிக்க | போஸ்ட் ஆஃபீஸின் சூப்பர் சேமிப்பு திட்டம்..! சிறு சேமிப்புக்கு நல்ல வட்டி: அசலுக்கு உத்தரவாதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News