விவசாயிகளே ரெடியா?..13வது தவணை விரைவில் உங்கள் வங்கி கணக்கில்

PM Kisan Nidhi: பிரதமரின் பிஎம் கிஷான் திட்டத்தின் 13-வது தவணை தொகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 15, 2023, 01:46 PM IST
  • பிஎம் கிஷான் 13வது தவணை.
  • கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் அறிமுகம்.
  • சுமார் 11 கோடி தகுதியுள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் 16000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு விட்டது.
விவசாயிகளே ரெடியா?..13வது தவணை விரைவில் உங்கள் வங்கி கணக்கில் title=

PM Kisan 13th Installment: பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 13வது தவணைக்கான காத்திருப்பு நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் தற்போது இந்த தவணையில் 2000 ரூபாய் விரைவில் விவசாயிகளின் கணக்கில் மத்திய அரசால் விடுவிக்கப்பட உள்ளது. உண்மையில், பிப்ரவரி 24 ஆம் தேதி, பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிலையில், பிரதமர் கிசான் நிதிக்கான தொகையும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, பாரதிய ஜனதா கட்சியின் கிசான் மோர்ச்சா பிப்ரவரி 24 முதல் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கும். மேலும் விவசாயிகளை சென்றடைய பாஜக கிசான் மோர்ச்சா நாடு முழுவதும் கிசான் சம்மேளனத்தை நடத்தும்.

பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 13வது தவணை
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 13-வது தவணைத் தொகை இன்று விடுவிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 2000 ரூபாய் தொகை நேரடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கல்வி கடன் வாங்க போறீங்களா? இந்த வங்கிகளில் ட்ரை பண்ணுங்க!

யாருக்கு வழங்கப்படாது
இதுவரை தங்களது நில ஆவணம் சார்ந்த தகவல்களையும், இ-கேஒய்சி தகவல்களையும் பதிவு செய்யாத விவசாயிகள் இந்த 13-வது தவணையைப் பெற முடியாது. மேலும், இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் மோசடிகளை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த நிலையில், நாட்டில் உள்ள லட்சக்கணக்கான தகுதியற்றவர்கள் அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விவசாயிகளின் கணக்கில் இதுவரை 12 தவணைகள் வந்துள்ளன. ஆனால் 13வது தவணைக்கான காத்திருப்பு நீண்டு கொண்டே செல்கிறது. உண்மையில், PM கிசானில் போலி பயனாளிகளின் தொடர்பு பற்றிய தகவல் அரசாங்கத்திற்கு கிடைத்தது. அதன் பிறகு அரசாங்கம் e-KYC க்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மின் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையே இருக்காது... ‘இதை’ பொருத்தினால் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News