247 ரூபாயில் தினமும் 3 ஜிபி BSNL வழங்கும் ரீசார்ஜ் பிளான்... என்னென்ன சலுகை கிடைக்கும் தெரிந்து கொள்ளுங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் தினசரி 3 GB தரவு மற்றும் மற்றும் வரம்பற்ற அழைப்பு வழங்கப்படுகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 11, 2020, 05:55 PM IST
247 ரூபாயில் தினமும் 3 ஜிபி BSNL வழங்கும் ரீசார்ஜ் பிளான்... என்னென்ன சலுகை கிடைக்கும் தெரிந்து கொள்ளுங்கள் title=

BSNL STV Rs 247: நாட்டின் ஒரே அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் அதிகரித்து வரும் போட்டிக்கு மத்தியில், பல சிறந்த நன்மைத் திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுதி வருகிறது. சமீபத்தில் வெறும் ரூ .247 க்கு பேங்-அப் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதில் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கின்றன. 

பிஎஸ்என்எல் எஸ்.டி.வி 247 திட்டம் (BSNL STV rs 247) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிறப்புத் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் 3 ஜிபி தரவைப் பெறுவார்கள். மேலும், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களாக இருக்கும். எஸ்.டி.வி 247 என்பது வரம்பற்ற காம்போ திட்டமாகும். இது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் 3 ஜிபி தரவுடன் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் என ஒட்டுமொத்தமாக, இந்த திட்டத்தில் 90 ஜிபி தரவு கிடைக்கிறது.

மேலும் படிக்க: 100 ரூபாய்க்கும் குறைவு!! ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

பிஎஸ்என்எல் (BSNL) எஸ்.டி.வி 247 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் 250 நிமிடங்கள் அழைப்பு கிடைக்கும். 

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்தத் திட்டம் மூலம் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. அவர்களும் புதிய திட்டத்தை அறிவிக்கலாம். 

BSNL எஸ்.டி.வி 247 திட்டத்தில் குரல் அழைப்பு வசதி எம்.டி.என்.எல் ரோமிங் பகுதியிலும், அதாவது டெல்லி மற்றும் மும்பையிலும் கிடைக்கிறது. இது தவிர, அரசு தொலைத் தொடர்பு நிறுவனம் தனது ரூ.998 மற்றும் ரூ .1,999 ப்ரீபெய்ட் திட்டங்களை மாற்றி அமைத்துள்ளது. 998 ரூபாய் திட்டம் இப்போது 270 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது, இப்போது இந்த திட்டத்தில் 30 நாட்கள் கூடுதல் செல்லுபடியாகும். 

மேலும் படிக்க: MTNL, BSNL மறு சீரமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது!

ரூ. 1999 இன் இந்த திட்டத்தில், வரம்பற்ற குரல் அழைப்புக்கு தினமும் 3 ஜிபி தரவு மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த வரம்பற்ற அழைப்பு 250 நிமிடங்கள் மட்டும் கொண்டிருக்கும்.

Trending News