செயற்கை கருத்தரிப்பை கூறியிருக்கும் பாபா வாங்கா! 2023 ஆம் ஆண்டு குறித்து அவரின் கணிப்புகள்

2023 ஆம் ஆண்டு குறித்து பாபா வாங்காவின் கணிப்புகளில் செயற்கை கருத்தரிப்பு குறித்த கணிப்பும் இடம்பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 18, 2022, 06:39 AM IST
செயற்கை கருத்தரிப்பை கூறியிருக்கும் பாபா வாங்கா! 2023 ஆம் ஆண்டு குறித்து அவரின் கணிப்புகள் title=

Baba Vanga Prediction  2023: உலகின் முதல் 'செயற்கை கருப்பை வசதி', Ectolife குறித்து இந்த நாட்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நுட்பத்தின் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்க தாயின் கருவறை தேவைப்படாது. இந்த செயற்கை கருப்பை உண்மையாகி விட்டால், 2023-ம் ஆண்டு குறித்த பாபா வெங்காவின் கணிப்பு சரியாகி விடும். இந்த நுட்பத்தின் மூலம் சில காரணங்களால் கருப்பை அகற்றப்பட்ட பெண்கள் கூட தாயாகலாம். இது தவிர, குழந்தை பெற இயலாத தம்பதிகள்கூட குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்.

மேலும் படிக்க | வார பலன் - மேஷம் முதல் கன்னி வரை; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்!

செயற்கை கருத்தரிப்பு 

பெர்லினின் பயோடெக்னாலஜிஸ்ட் மற்றும் அறிவியல் தொடர்பாளர் ஹஷேம் அல்-கைலி கூறுகையில், இது உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் 50 ஆண்டுகால மகத்தான அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்றும், இப்போது இதுபோன்ற பிரசவம் அதிகரிக்கத் தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் கூறினார். இந்தச் செயல்பாட்டில் இன் விட்ரோ கருத்தரித்தல் (IVF) பயன்படுத்தப்படும். குழந்தையின் இதயத்துடிப்பு, வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவு போன்ற நாடித் துடிப்பைக் கண்காணிக்க வளர்ச்சிப் பட்டைகளில் சென்சார்கள் பயன்படுத்தப்படும். இதில் இருந்து பிறக்கும் குழந்தைகள் முழுமையாக கண்காணிக்கப்படும். குழந்தையின் வளர்ச்சியின் நேரடி காட்சிகளை வழங்கும் செயலியை நிறுவனம் பெற்றோருக்கு வழங்கும். இதன் மூலம் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படாது.

பாபா வாங்கா கணிப்பு 

2023 ஆம் ஆண்டைப் பற்றி பாபா வாங்கா கணித்துள்ளார். அந்த கணிப்பில், பெற்றோர்கள் முதலில் தங்கள் குழந்தையின் குணங்களையும் தோற்றத்தையும் தீர்மானிக்க முடியும். இனி வரும் காலங்களில் மனிதர்கள் ஆய்வகத்தில் பிறப்பார்கள் என்று பாபா வெங்கா கூறியிருக்கிறார். உலகின் முதல் செயற்கை கருவூட்டல் வசதியான எக்டோலைஃப் நடைமுறைக்கு வந்தால், பாபா வெங்காவின் ஆய்வகக் குழந்தை கணிப்பு நிறைவேறும். 

மேலும் படிக்க | மாதங்களில் நான் மார்கழி! கண்ணனுக்கு பிடித்தமான 2022 மார்கழி மாத ராசி பலன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News