உடலில் பச்சை குத்திக்கொள்ளுதல் என்பது தற்போதைய இளைஞர்களின் பொழுது போக்கு, ஒருகாலத்தில் பச்சை குற்றுதல் என்பது மருத்துவமாக பார்க்கப்பட்டது ஆனால் அது தற்போது மருவி டேட்டோ என்னும் மார்டன் ஆர்ட்-கவே மாறிவிட்டது.
இந்த கலைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை என்னும் அளவிற்கே தற்போதைய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் தன் உடம்பு முழுவதும் டேட்டோ மை-க்காக அற்பனித்துவிட்டார்.
இந்த அற்பனிப்பின் உச்சமாய் தற்போது அவரது உடம்பில் மேலும் டேட்டோ பன்னுவதற்கான இடமே இல்லாமல் போய்விட்டது. குறிப்பாக கண்ணின் கருவிழி, உதடு என அனைத்து பாகங்களிலும் டோட்டோ-வினை பதித்து விட்டார் இந்த இளைஞி...
சுமார் $8000 டாலர்களை இந்த கலைக்காக இதுவரை செலவு செய்துள்ள இந்த 23-வயது இளம்பெண், தனது 16-வது வயதில் முதல் டேட்டோவினை பெற்றுள்ளார். தற்போது இவரது உடலில் 50-க்கு மேற்பட்ட டேட்டோ டிசைன்கள் குடிகொண்யேறியுள்ளது.
ஆரம்பத்தில் ஒரே வண்ணத்தில் இருந்த தன் சருமத்தினை விரும்பாத இவர், டேட்டோ மூலம் மாற்றிக்கொள்ள நினைத்துள்ளார்., பின்னர் அதுவே இவரது விருப்பமாக மாறிவிட்டது. இவரது டேட்டா ஆர்வம் மட்டுமல்லாமல், அதனை புகைப்படமாக எடுத்து வலைதளங்களில் பகிர்வதிலும் இவருக்கு அலாதி பிரியம். இதனால் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் இவரை பின்தொடர்வோர்களின் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்துள்ளது.