எச்சரிக்கை: நீங்கள் வைத்திருக்கும் ஆதார் அட்டை உண்மையானது தானா?

ஆதார் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்யலாம் அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.  

Written by - RK Spark | Last Updated : Nov 5, 2022, 06:18 AM IST
  • ஆதார் கார்டில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது.
  • இதனை தடுக்க அரசு பல முயற்சிகளை மேற்கொள்கிறது.
  • ஆதார் குறித்த சந்தேகங்களுக்கு 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்யலாம்.
எச்சரிக்கை: நீங்கள் வைத்திருக்கும் ஆதார் அட்டை உண்மையானது தானா?  title=

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் உங்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டை உண்மைதானா என்று இதுவரை யோசித்து பார்த்ததுண்டா? இப்போது நம்மிடம் இருக்கும் ஆதார் அட்டை உண்மையானது தான என்பதை கண்டுபிடிக்க சில வழிகள் உள்ளது, அதனை பின்பற்றுவதன் மூலம் ஆதார் அட்டையின் நம்பகத்தன்மையை கண்டறியலாம்.  இ-ஆதாரிலுள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஆதார் அட்டையின் நம்பகத்தன்மையை தெரிந்துகொள்ளலாம்.  முன்னர் இ-ஆதாரில் இருந்த கியூஆர் குறியீடு ஆதார் எண் வைத்திருப்பவரின் மக்கள்தொகைத் தகவல்களை மட்டுமே கொண்டிருந்தது, ஆனால் இப்போது யூஐடிஏஐ இ-ஆதாரில் கியூஆர் கோடில் புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டு வந்துள்ளது.  இப்போது அதில் மக்கள்தொகையுடன் சேர்த்து ஆதார் எண் வைத்திருப்பவரின் புகைப்படமும் உள்ளது.

மேலும் படிக்க | RBI Digital Rupee:இன்று அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி; ரிசர்வ் வங்கி அறிவிப்பு 

கியூஆர் கோட் ஸ்கேனரைப் பயன்படுத்துவதன் மூலம் ஆதாரில் நடைபெறும் எந்தவொரு மோசடி முயற்சியையும் எளிதாகக் கண்டறியலாம்.  விண்டோஸ் பயன்பாடு (டெஸ்க்டாப்/லேப்டாப்களுக்கு):  https://uidai.gov.in/images/authDoc/UIDAI_Secure_QR_Code_Reader_4.0.msi இதன் மூலம் கண்டறியலாம்.  புதிய கியூஆர் குறியீட்டின் மூலம் குறிப்பு ஐடி, பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல், முகவரி மற்றும் புகைப்படம் போன்ற உங்களது தனிப்பட்ட தகவல்கள் சேமிக்கப்படும்.

யூஐடிஏஐ-ன் கியூஆர் குறியீடு செயலியை டவுன்லோடு செய்து ஸ்கேனரைப் பயன்படுத்தி ஆதார்/இ-ஆதார்/எம்-ஆதார்-இன் பாதுகாப்பான கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.  கியூஆர் குறியீடு UIDAI ஆல் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்பட்டதும், உங்களின் தனிப்பட்ட விவரங்கள் காண்பிக்கப்படும். ஹேண்ட்ஹோல்ட் ஸ்கேனர் சாதனம், இ-ஆதாரில் உள்ள பாதுகாப்பான க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கும், மக்களின் விவரங்களை காண்பிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.  மேலும் ஆதார் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்யலாம் அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு அதிர்ச்சி! முக்கிய விதிகளில் மாற்றங்கள், அரசு உத்தரவு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News