வங்கியில் ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், அதை இன்றே முடித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நாளை (சனிக்கிழமை) முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் வங்கிகள் வழக்கம்போல் இயங்காது. அதேநேரம் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் வங்கி சங்கம் நடத்தும் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சார்பில், வங்கி தொழிற்சங்க வேலைநிறுத்தம் காரணமாக மார்ச் 28 மற்றும் மார்ச் 29 ஆகிய தேதிகளில் வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி வேலைநிறுத்தம் தனியார்மயமாக்கலுக்கு எதிராக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பணவரவு, மகிழ்ச்சி பொங்க வீட்டில் எந்த சிலைகளை வைக்க வேண்டும்?
எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம் என்று கூறப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் போன்ற அமைப்புகளால் இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி மூடப்படும்
ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விடுமுறைகளின் பட்டியலின்படி, வங்கி விடுமுறைகள் வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் சிறப்பு சந்தர்ப்பங்களின் அறிவிப்பைப் பொறுத்தது. இந்த விடுமுறைகள் அனைத்து மாநிலங்களிலும் பொருந்தாது.
விடுமுறை நாட்களின் பட்டியலைப் பார்க்கவும் (வங்கி விடுமுறை பட்டியல் ஏப்ரல் 2022)
ஏப்ரல் 1 - வங்கிக் கணக்குகளின் வருடாந்திர மூடல் - (அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)
ஏப்ரல் 2 – குடி பத்வா/உகாதி விழா/நவராத்திரியின் முதல் நாள்/தெலுங்கு புத்தாண்டு/சஜிபு நோங்கம்பாம்பா (சைரோபா) – பேலாபூர், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களின் வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் 3 - ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)
ஏப்ரல் 4 - சாரிஹுல்-ராஞ்சி வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் 5 - பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் - ஹைதராபாத் வங்கிகளுக்கு விடுமுறை.
9 ஏப்ரல் - சனிக்கிழமை (மாதத்தின் 2வது சனிக்கிழமை)
ஏப்ரல் 10 - ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)
ஏப்ரல் 14 - டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/ மகாவீர் ஜெயந்தி/ பைசாகி/ தமிழ் புத்தாண்டு/ சைரோபா, பிஜூ விழா/ போஹர் பிஹு - ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
15 ஏப்ரல் - புனித வெள்ளி / பெங்காலி புத்தாண்டு / ஹிமாச்சல் நாள் / விஷு / போஹாக் பிஹு - ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் 16 - போஹாக் பிஹு - கவுகாத்தி வங்கிகளுக்கு விடுமுறை.
ஏப்ரல் 17 - ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)
ஏப்ரல் 21 - கடியா பூஜை - அகர்தலாவில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன
ஏப்ரல் 23 - சனிக்கிழமை (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை)
ஏப்ரல் 24 - ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)
ஏப்ரல் 29 - ஷப்-இ-கத்ர்/ஜுமாத்-உல்-விடா - ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வங்கிகளுக்கு விடுமுறை.
மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR