Akshaya Tritiyai 2022: அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் SBI-ல் பம்பர் கேஷ்பேக் சலுகை

Akshaya Tritiya 2022: அட்சய திருதியை அன்று வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் நகைகளை வாங்குவதற்கு வங்கி சலுகைகளை வழங்கியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 30, 2022, 01:59 PM IST
  • அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
  • இந்த முறை அட்சய திருதியையில் சுப யோகங்கள் அமைகின்றன.
  • எஸ்பிஐ கார்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்வதன் மூலம் நீங்கள் கேஷ்பேக்கைப் பெறலாம்.
Akshaya Tritiyai 2022: அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் SBI-ல் பம்பர் கேஷ்பேக் சலுகை title=

அட்சய திரிதியா சலுகை 2022: அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் மக்கள் அதிக அளவில் தங்க நகைகள் மற்றும் நாணயங்களை வாங்குகிறார்கள். 

இந்த நாளில் செய்யும் செயல்களை நாம் அடிக்கடி செய்வோம் என நம்பப்படுகின்றது. ஆகையால், இந்த நாளில் அதிக அளவில் தான தர்மம் செய்யவும் அறிவுறுத்தப்படுகின்றது. இந்த நாளில் தங்கம் வாங்கினால், வருடம் முழுதும் செல்வச்செழிப்புடன் இருப்போம் என்பது ஐதீகம்.

இந்த அட்சய திருதியையை சிறப்பாக கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் நகைகளை வாங்குவதற்கு வங்கி சலுகைகளை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கியின் கார்டின் மூலம் நகை வாங்கும்போது போது கேஷ்பேக்கை பரிசாகப் பெறுவார்கள்.

மேலும் படிக்க | Akshaya Tritiya 2022: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் 

எஸ்பிஐ கார்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்வதன் மூலம் நீங்கள் கேஷ்பேக்கைப் பெறலாம். வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,000 வரை கேஷ்பேக் கிடைக்கும்.

இந்த முறை அட்சய திருதியையில் சுப யோகங்கள் அமைகின்றன 

வைகாசி மாதத்தில் வளர்பிறையில் மூன்றாம் நாளில் கொண்டாடப்படும் அட்சய திருதியை இந்த முறை 3 மே 2022 அன்று கொண்டாடப்படுகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் அட்சய திருதியை செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்தின் ஷோபன யோகத்தில் கொண்டாடப்படும். 

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற சுப கிரக சேர்க்கை நடைபெறுவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது தவிர, 30 ஆண்டுகளுக்குப் பிறகு அட்சய திருதியை சுப யோகத்தில் வருகிறது. ஜோதிடத்தில், இந்த நாள் மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. இத்தகைய மங்களகரமான யோகத்தில் நீராடி, தானம் செய்வதால், புண்ணியத்தை அடைவது பன்மடங்கு பெருகும்.

அட்சய திருதியை சுப நேரம்:

அக்ஷய திருதியை தேதி: மே 3 காலை 5:18 மணிக்கு தொடங்குகிறது
அட்சய திருதியை திதி நிறைவு: மே 4 காலை 7.32 மணி வரை.
ரோகிணி நட்சத்திரம்: மே 3, 2022 அன்று அதிகாலை 12:34 முதல் மே 4 அதிகாலை 3:18 வரை.

மேலும் படிக்க | Akshaya Tritiyai 2022: இந்த நன்நாளில் இதை செய்தால் பன்மடங்கு நன்மை உண்டாகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News