7th Pay Commission சூப்பர் செய்தி: 34% டிஏ பற்றிய முக்கிய அப்டேட்

DA Hike: பண்டிகைக் காலத்தில் அரசு அகவிலைப்படியை உயர்த்தி, அதற்கான அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2022, 10:14 AM IST
  • ஜனவரி 2022 முதல் 3% கூடுதல் அகவிலைப்படி கிடைக்கும்.
  • சம்பளம் சுமார் 90 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்படும்.
  • குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சம்பளத்தின் கணக்கீட்டை அறிந்து கொள்ளுங்கள்.
7th Pay Commission சூப்பர் செய்தி: 34% டிஏ பற்றிய முக்கிய அப்டேட் title=

அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஹோலிக்கு முன்னதாக அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்ப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது, ​​அரசு அகவிலைப்படியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் பண்டிகைக் காலத்தில் அரசு அகவிலைப்படியை உயர்த்தி, அதற்கான அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3% அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அகவிலைப்படியில் 3% உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 34% வீதத்தில் அகவிலைப்படி கிடைக்கும். தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ இன்டெக்ஸ்) டிசம்பர் 2021 குறியீட்டில் ஒரு புள்ளி குறைந்துள்ளது. அகவிலைப்படிக்கான சராசரி 12 மாத குறியீடு 351.33 ஆகவும் இதன் சராசரியாக 34.04% ஆகவும் உள்ளன. எனினும், அகவிலைப்படி எப்போதும் முழு எண்களில் வழங்கப்படுகிறது. ஆகையால், ஜனவரி 2022 முதல், மொத்த அகவிலைப்படி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு எப்போது வரும்?

ஊழியர்கள் ஏற்கனவே 31% அகவிலைப்படியைப் பெர்று வருகின்றனர். ஜனவரி 2022 முதல், 3% கூடுதல் அகவிலைப்படியின் பலனை ஊழியர்கள் பெறக்கூடும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, அடிப்படை சம்பளத்தில் மட்டுமே அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மார்ச் மாதம் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தேர்தல் காரணமாக நடத்தை விதிகள் விதிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் காலத்தில் அரசாங்கம் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி அறிவிக்காது.

ஏஐசிபிஐ-ஐடபிள்யூ டிசம்பரில் குறைந்தது

அரசின் இந்த முடிவால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு ஜூலை 2022- இல் கணக்கிடப்படும். டிசம்பர் 2021க்கான ஏஐசிபிஐ-ஐடபிள்யூ குறியீடு தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையின்படி, டிசம்பரில் இந்த எண்ணிக்கை 0.3 புள்ளிகள் குறைந்து 125.4 புள்ளிகளாக இருந்தது. நவம்பர் மாதத்தில், இது 125.7 புள்ளிகளாக இருந்தது. டிசம்பரில் எண்ணிக்கை 0.24% குறைந்தாலும், இது அகவிலைப்படி அதிகரிப்பை பாதிக்கவில்லை. தொழிலாளர் அமைச்சகத்தின் ஏஐசிபிஐ-ஐடபிள்யூ புள்ளிவிவரங்கள் வந்த பிறகு, இந்த முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாகிவிட்டது. 

நவம்பரில் அதிகரித்தது

தொழிலாளர் அமைச்சகத்தின் தரவுகளின்படி, நவம்பர் 2021 இல் ஏஐசிபிஐ-ஐடபிள்யூ குறியீடு 0.8% அதிகரித்து 125.7ஐ எட்டியது. இதிலிருந்து அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படும் என்பது தெளிவானது. இப்போது டிசம்பர் 2021 இன் எண்ணிக்கையில் சிறிது சரிவு ஏற்பட்டாலும், ஜனவரி 2022 இல், 3 சதவிகிதம் என்ற விகிதத்தில் அகவிலைபப்டி அதிகரிக்கும். அரசு ஊழியர்களின் அகவிலைபப்டி தற்போது 31 சதவீதமாக உள்ளது. இப்போது 3 சதவீத உயர்வுக்குப் பிறகு இது 34 சதவீதத்தை எட்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி 

ஜூலை 2021 முதல் டிஏ கால்குலேட்டர்

ஜூலை 2021 - AICPI-353 - அகவிலைப்படி - 31.81%
ஆகஸ்ட் 2021 - AICPI-354 - அகவிலைப்படி -  32.33%
செப்டம்பர் 2021 - AICPI- 355- அகவிலைப்படி -  32.81%
நவம்பர் 2021 - AICPI - 362.016- அகவிலைப்படி -  33 %
டிசம்பர் 2021  - AICPI - 361.152 - அகவிலைப்படி - 34%

அகவிலைபப்டி எண்களின் கணக்கீடு

ஜூலைக்கான கணக்கீடு- 122.8X 2.88 = 353.664
ஆகஸ்டுக்கான கணக்கீடு- 123X 2.88 = 354.24
செப்டம்பர் மாதத்திற்கான கணக்கீடு- 123.3X 2.88 = 355.104
நவம்பர் மாதத்திற்கான கணக்கீடு - 125.7X 2.88= 362.016
டிசம்பர் மாதத்திற்கான கணக்கீடு - 125.4 X 2.88 = 361.152

34% DA இல் கணக்கீடு

அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்ட பிறகு, மொத்த அகவிலைபப்டி 34% ஆக இருக்கும். இப்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். வித்தியாசத்தைப் பற்றி பேசும்போது, சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ.5580/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6120- 5580 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 540X12 = ரூ.6,480

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ 19,346/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ 17,639/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 19,346-17,639 = ரூ. 1,707/மாதம் 
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1,707 X12 = ரூ 20,484

மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் பரிசு: வட்டியில்லா முன்பணத்தை அளிக்கிறது அரசு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News