7th Pay Commission பம்பர் செய்தி: ஊதியத்துடன் கூடுதலாக கிடைக்கும் இந்த தொகை

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாத சம்பளத்துடன் கூடுதலாக ரூ.4500 கிடைக்கும். இதற்கான வவுச்சர்களை நிரப்பி, பணியாளர்கள் இதற்குத் தகுதி பெறலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 24, 2022, 08:12 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
  • ஜனவரி மாத சம்பளத்துடன் கூடுதலாக ரூ.4500 கிடைக்கும்.
  • மத்திய ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது.
7th Pay Commission பம்பர் செய்தி: ஊதியத்துடன் கூடுதலாக கிடைக்கும் இந்த தொகை title=

7th Pay Commission Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஊடக அறிக்கைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2022 சம்பளத்துடன் கூடுதல் தொகையும் கிடைக்கும். இது சம்பந்தமான அறிவிப்பு, ஜனவரி 26, 2022 குடியரசு தினத்தன்று அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜீ பிசினஸ் அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு (Government Employees) ஜனவரி மாத சம்பளத்துடன் கூடுதலாக ரூ.4500 கிடைக்கும். இதற்கான வவுச்சர்களை நிரப்பி, பணியாளர்கள் இதற்குத் தகுதி பெறலாம். 

மத்திய அரசு ஊழியர்கள் ரூ.4,500 பெறுவது எப்படி?

குழந்தை கல்வி உதவித்தொகை (Children Education Allowance) மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அளிக்கும் பலவித கொடுப்பனவுகளின் ஒன்றாகும். கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், ஜனவரி சம்பளத்துடன் CEA-ஐ கிளெயிம் செய்யலாம் என்று கூறியுள்ளது. இதை கிளெயிம் செய்ய எந்தவித அதிகாரப்பூர்வ ஆவணத்துக்கான தேவையும் இருக்காது. 

7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு 2250 ரூபாய் CEA கிடைக்கும். தொற்றுநோய்க்கு மத்தியில் பள்ளிகள் மூடப்பட்டன. இருப்பினும், எந்த ஆவணமும் இல்லாமல் CEA -ஐ கிளெயிம் செய்ய அரசு ஊழியர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. 

ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, ஊதியம் இரட்டிப்பாகலாம்!! 

மத்திய ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது

அரசு ஊழியர்களுக்கு 2 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆகையால், ஒரு ஊழியருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தால், 4500 ரூபாய் ஊழியர் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி (Dearness Allowance) அரியர் தொகைக்காகக் காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. இது தொடர்பான அறிவிப்பு 2022 ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 3% DA உயர்வு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News