2021 மார்கழி மாதம் இரண்டாம் நாள்! ஆயர்பாடியும் தில்லை சிற்றம்பலமும்!!

மாதங்களில் மிகவும் சிறப்புமிக்க மார்கழி மாதம் இரண்டாம் நாள் இன்று... திருப்பாவை மற்றும்  திருவெம்பாவையால் பாடி தேவர்களை திருப்பள்ளி எழச் செய்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 17, 2021, 07:08 AM IST
  • திருப்பாவையால் கண்ணனை துதிப்போம்
  • திருப்பள்ளி எழுச்சியால் தேவர்களை வணங்குவோம்
  • திருவெம்பாவையால் சிவனின் மனம் குளிரச் செய்வோம்
2021 மார்கழி மாதம் இரண்டாம் நாள்! ஆயர்பாடியும் தில்லை சிற்றம்பலமும்!! title=

புதுடெல்லி: இந்து மதத்தில் மார்கழி மாதம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. தமிழில் மார்கழி என்றால், பல மொழிகளில் தனுர் மாதம் என்று அழைக்கப்படும் இந்த புனிதமான மாதத்தில் இறைவனை அதிகாலையில் வணங்குவது சிறப்பானது. அதிகாலையில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடி இறைவனை வழிபடும் கலாசாரம், பாரம்பரியமாகத் தொடர்கிறது.

திருப்பதி பெருமாள் கோவிலில் மார்கழியின் 30 நாட்களும் சுப்ரபாதத்திற்கு பதிலாக ஆழ்வார்களின் பாசுரங்களில் முக்கியமான திருப்பாவை (Andal Thiruppavai) பாடப்படுவது தொன்றுதொட்டு வரும் வழக்கம். 63 நாயன்மார்களின் ஒருவரான மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவெம்பாவை மார்கழி மாதம் முழுவதும் சிவனின் திருக்கோவில்களில் பாடப்படுகிறது. 

இன்றைய திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருவெம்பாவை... பாடி அருள் பெறுக...

ALSO READ | 2022-ல் இவர்கள் மீது சனி பகவானின் அருள் உச்சத்தில் இருக்கும்

திருப்பாவை - 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: கண்ணன் அவதரித்த ஆயர்பாடியில் வாழும் கன்னியரே! இந்த உலகத்தில் இருந்து நாம் விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடையவேண்டும். அதற்காக, விரதமிருந்து வணங்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். அதிகாலையே நீராடி விட வேண்டும். நெய் உண்ணாமல், பால் குடிக்காமல் விரதம் இருக்க வேண்டும்.  கண்ணில் மை தீட்டாமல், கூந்தலில் மலர் சூடாமல் அதாவது அலங்காரங்களை தவிர்க்க வேண்டும் (Avoid Makeover). மனதாலும் தீய செயல்களை நினைக்க வேண்டாம். வாயிலிருந்து தீய சொற்களை சொல்வது கூட பாவம், எனவே பிறரைப் பற்றி பேசவே வேண்டாம். எளியவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளும் திருப்தியடையுமாறு தர்மம் செய்ய வேண்டும்.

READ ALSO | கேது பெயர்ச்சி 2022: ‘இந்த’ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

திருப்பள்ளியெழுச்சி - 2
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
 அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கே உதித்துவிட்டான். உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் அருணன் உதித்து, இருளை நீக்கி விட்டான். பெம்மானே! உனது கண்களை ஒத்த தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட்டன. அவற்றில் தேன் அருந்த வண்டுகள் திரளாக வந்து கொண்டிருக்கின்றன. அருட்செல்வத்தை வாரி வழங்கும் ஐயனே! மலை போல் இன்பம் தருபவனே! அருட்கடலே! நீ கண் விழிப்பாயாக.

Also Read | ஒருவருக்கு ஒன்றல்ல, 3 ராசிகள் உள்ளன! எது எந்த நேரத்தில் செயல்படும் தெரியுமா?

திருவெம்பாவை பாடல் - 2

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

பொருள்: சிறந்த அணிகளை அணிந்த பெண்ணே! இரவு பகல் பாராமல் நாம் பேசிக்கொண்டே இருக்கும்போது, உனது அன்பு, மேலான ஒளிப் பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாயே! இப்போது, இன்னும் உறக்கம் கலையாமல், படுத்திருக்கும் படுக்கை மீது அன்பு வைத்தாயோ? பெண்களே! சீச்சி நீங்கள் பேசும் நகை மொழிகளில் இவையும் ஒன்றோ! என்னை விளையாட்டாய் திட்டுவதற்கான நேரம் இதுவா என்ன? தேவர்களும் வழிபடுதற்கு நாணுகின்ற தாமரை மலர் போன்ற திருவடியை கொண்ட சிவபெருமான், அன்பருக்கு அருளை கொடுத்து அருள ஒளி உருவாய் காட்சியளித்தவன்; தில்லைச் சிற்றம்பலத்து இறைவன் மீது அன்பு வைத்தவர்கள் நாம்!

Read Also | 2021 மார்கழி மாதம் முதல் நாள்! திருப்பாவை திருவெம்பாவை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News