எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து இன்று காலை கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்கிறார்.
இதுதொடர்பாக, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. இந்த வாதத்தின் போது மத்திய அரசின் வழக்கறிஞரான ரோஹத்கி கூறுகையில், காங்கிரஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் ஆளுநரின் பணியை செய்ய விடுங்கள். ஆட்சியமைக்க அழைப்பது ஆளுநரின் கடமை. என்றார்.
இதனை தொடர்ந்து, நீஎடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அளித்து, முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்க தடையில்லை. நாளை மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கடிதங்களை நாளை காலை 10 மணிக்குள் எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும். பதவியேற்பு வழக்கு இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.