பாட்னா ஜெயபிரகாஷ் நாராயண் சர்வதேச விமானநிலையத்தில்(JPNI) தற்போது 24*7 சேவை துவங்கப்பட்டதாக JPNI தலைவர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 25 முதல் துவங்கி பாட்னா ஜெயபிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில்(JPNI) 24*7 சேவை துவங்கப்பட்டதாகவும், பொது மக்களின் பயண கஷ்டங்களை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டிற்கு சுமார் 30 லட்சம் பேர் பயணம் செய்யும் இந்த விமான நிலையப் பயணிகளுக்கும இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார் அவர்.
தொடர்ந்து பேசிய அவர் தெரிவிக்கையில் "இந்த விமான நிலையமானது 70’களில் இரண்டே விமானங்களை கொண்டு தனது சேவையினை துவங்கியது. தற்போது பிரமாண்டமாக வளர்ந்து நிர்க்கின்றது" என தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், புனே-பட்னா பாதையில் ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் மட்டும் 100-க்கு 90 இடங்களு மக்கள் பூர்த்தி செய்துவிடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர். எனவே மக்கள் அடர்த்தியால் ஏற்படும் சிறமங்களை குறைக்கவே புது விமான சேவைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 24*7 சேவையின் மூலம் ஏர்ஏசியா மற்றும் விஸ்டாரா விமான சேவை நிறுவனங்கள் பாட்னா வழித்தடத்தில் 2 விமானங்களை இயக்கவுள்ளனர் எனவும், இந்த விமானங்கள் ஞாயிறுதோறும் மாலை 6 மணியளவில் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.