60 க்கும் மேற்பட்ட ரயில் சேவை முடக்கம்: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

மும்பை மாங்குங்கா மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் இரயில் நிலையங்களுக்கு இடையே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Last Updated : Mar 20, 2018, 11:45 AM IST
60 க்கும் மேற்பட்ட ரயில் சேவை முடக்கம்: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!  title=

மும்பை மாங்குங்கா மற்றும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் இரயில் நிலையங்களுக்கு இடையே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே மகாராஷ்டிரா தலைநகரில் உள்ள உள்ளூர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதன் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கியுள்ளனர். 

 ரயில்வே அப்ரெண்டிஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுக்கு பணி நியமனம் வழங்க கோரி காலை 7 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மாணவர்கள் போராட்டத்தில் மாதுங்கா மற்றும் தாதர் நிலையங்களுக்கு இடையேயான 60 க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டங்கள் போராட்டம் உடனே தீவிரமடைந்த நிலையில் காவல் துறையினர் அந்த இடத்திற்கு விரைந்தனர். அப்போது ரயில் தடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க முயன்றபோது போது காவல் துறையினர் மீது மாணவர்கள் கற்களை வீசினர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த பணி நியமனமும் செய்யப்படவில்லை. 10 மாணவர்கள் வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் இங்கு வந்து எங்களை சந்திக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட போவது இல்லை என்றனர். மும்பை பிரிவு ரயில்வே மேலாளரிடம் நாங்கள் பலமுறை விடுத்த கோரிக்கைகள் தோல்வியில்தான் முடிந்துள்ளது என்று தெரிவித்தார். 

Trending News