JIO-வின் புதிய சேவை குறித்த தகவல்? யாருக்கு நன்மைகள்!!

டெலிகாம் துறையையில் பல மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்த ரிலையன்ஸ் ஜியோ, அடுத்து டிடிஎச் துறையிலும் நுழைகிறது. அப்படி நுழைந்தால் யாருக்கு நன்மைகள் என்று பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 19, 2018, 05:50 PM IST
JIO-வின் புதிய சேவை குறித்த தகவல்? யாருக்கு நன்மைகள்!! title=
ஜியோ ஹோம் TV என்ற பெயரில் ரிலையன்ஸ் ஜியோ புதிய சேவை வழங்க உள்ளது. இந்த Jio Home TV-யில் HD மற்றும் SD வரையறைகளில் சேனல்களைப் பார்க்க முடியும். ஆனால் ஜியோ ஹோம் டி.வி சேவை தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் இருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை. ஆனால் விரைவில் ஜியோ ஹோம் டி.வி சேவை தொடங்கப்படும் என செய்திகள் வந்துள்ளன. இதைப்பார்க்கும் போது, இந்த சேவையை தொடங்கப்படுவது உண்மை என தோன்றுகிறது. 
 
புரட்சியை ஏற்படுத்துமா? ஜியோ ஹோம் டிவி:-
அப்படி ஒருவேளை ஜியோ ஹோம் டி.வி சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டால், இந்திய டிடிஹெச் (DTH) துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அனைத்து சேனல்களும் 200 ரூபாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் எஸ்டி (SD) மற்றும் ஹெச்டி(HD) சேனல்களுக்கு மாதம் 400 ரூபாய் என கட்டணம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த சேவை என்ஹான்ஸ்டு மல்டிமீடியா பிராட்கேஸ்ட் மல்டிகேஸ்ட் சர்வீஸ் (EMBMS) என கூறப்படுகிறது.  இது நேரடி டி.டி.எச் சேவையல்ல, இது பற்றிய தகவலைப் விவைவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.
 
டெலிகாம் நிறுவனத்தின் அறிக்கையின்படி, முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் விரைவில் ஜியோ ஹோம் டி.வி. சேவையைத் தொடங்கும். இது ஜியோ பிராட்காஸ்ட் (JioBroadcast)  ஆப் மூலம் செயல்படும். இந்த ஆப் மூலம் எச்டி தர ஸ்ட்ரீமிங் சேவையை வழங்குவதற்காக (கூகுள் பிளே ஸ்டோர் வழியாக) பயன்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஜியோ பிராட்காஸ்ட் (JioBroadcast) சேவையானது அடுத்த சில வாரங்களில் ஜியோ பயனர்களுக்கு நேரடியாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
திட்டம் என்ன:-
இருப்பினும், eMBMS அல்லது மேம்படுத்தப்பட்ட மல்டிமீடியா பிராட்காஸ்ட் மல்டிகாஸ்ட் சேவையானது ஒரு ஹைபரிட் தொழில்நுட்பம் ஆகும் என்பதும், இது டிவி சேனல்கள் மற்றும் எப்எம் ரேடியோக்களால் பயன்படுத்தப்படும் ஒன்-டூ ஒன் கட்டமைப்ப்பையும் சாத்தியமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த சேவையின் பலன் என்ன:-
ஜியோவின் EMBMS சேவை முழு நாட்டிலும் இயங்குகிறது. eMBMS என்பது ஹைபரிட் தொழில்நுட்பம், இது டிவி சேனலின் திறன்களையும் ரேடியோ கட்டமைப்புகளையும் இணைத்து மக்களுக்கு HD உள்ளடக்கத்தை வழங்கும். இது தவிர, இதை பயன்படுத்த ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆக்டிவ் இன்டர்நெட் இணைப்பு தேவைப்படாது. 
 
நிறுவனம் என்ன சொல்கிறது:- 
இந்த சேவை பற்றி பல்வேறு வகையான விவாதங்கள் உள்ளன. ஆனால் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய சில அதிகாரிகள் கூறுகையில், தற்போது என்ன நடக்கிறது என இந்த சேவை என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கையை அளிக்க முடியாது. இத்தகைய சேவை வந்தால், நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும், அப்பொழுது அனைவருக்கும் தெரிந்துவிடும் எனக் கூறினார்கள்.
 
ஜியோ ஹோம் டிவி தொடர்பான விஷயங்கள்:-
  • ஜியோ ஹோம் டிவியில், எஸ்.டி மற்றும் எச்டி சேனல்கள் ஆகியவற்றைப் பார்க்க முடியும். ரூ. 400 மாதாந்திர கட்டணம் இருக்கும்.
  • ஜியோ ஹோம் டி.வி. eMBMS தொழில்நுட்பத்தில் வேலை செய்யும். இது மேம்படுத்தப்பட்ட மல்டிமீடியா பிராட்காஸ்ட் மல்டிகாஸ்ட் சேவையாகும்.
  • ஜியோ வீட்டு டிவி ஜியோ பிராட்காஸ்ட் பயன்பாட்டின் திருத்தப்பட்ட பதிப்பாக இருக்கும். அதன் சோதனை தற்போது நடந்து வருகிறது.
  • eMBMS ஹைபரிட் தொழில்நுட்பம் மூலம் டிவி சேனல்கள் மற்றும் ரேடியோ கட்டமைப்புகளையும் இணைத்து மக்களுக்கு HD உள்ளடக்கத்தை வழங்கும்.
  • இதை பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கும் இன்டர்நெட் இணைப்பு தேவையில்லை. இது முற்றிலும் ஆஃப்லைனில் வேலை செய்யும்.

 

Trending News