ஐபிஎல் 2018 22_வது லீக்: டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது  

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 23, 2018, 07:36 PM IST
ஐபிஎல் 2018 22_வது லீக்: டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு title=

 இன்று நடைபெறும் 22_வது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

 

 


ஐ.பி.எல் தொடர் 11_வது சீசனின், இன்று நடைபெறும் 22_வது லீக் போட்டியில் டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது.

கவுதம் காம்பீர் தலைமையிலான டெல்லி அணி 5 போட்டிகளில் விளையாடி 4 தோல்வியும், ஒன்றில் வெற்றியும் பெற்று ஐசிசி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த சீசனில் டெல்லி அணி மொஹாலியில் நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுள்ளது. இன்று தனது சொந்த மண்ணில் டெல்லி அணி, பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் டெல்லி அணி பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

அதேவேளையில், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியும், ஒன்றில் தோல்வியும் பெற்று ஐசிசி புள்ளிகள் பட்டியலில் 2_வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில் மற்றும் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி வருவதால், டெல்லி அணிக்கு இவர்கள் சவாலாக இருப்பார்கள்.

இதுவரை பஞ்சாப் அணி மற்றும் டெல்லி அணி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பஞ்சாப் 12 வெற்றியும், டெல்லி 9 வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல இன்று போட்டி நடைபெறும் மைதானத்தில் டெல்லி 5 போட்டியில் வெற்றியும், பஞ்சாப் 4 போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.

Kings XI Punjab : லோகேஷ் ராகுல் (வி), கிறிஸ் கெயில், மாயங்க் அகர்வால், கருன் நாயர், ஆரோன் பிஞ்ச், யுவராஜ் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின்(கே), கேட்ச் ஆண்ட்ரூ டை, பரேண்டர் ஸ்ரான், அங்கிட் ராஜ்பூட், முஜீப் உர் ரஹ்மான், ஆக்ஸார் படேல், டேவிட் மில்லர், மார்கஸ் ஸ்டோனிஸ், மனோஜ் திவாரி, மோஹித் சர்மா, அக்ஷ்திப் நாத், பென் டிவாஷுஷிஸ், பார்டீப் சாகு, மயங்க் தாகர், மஞ்சூர் தார்.

 

 

Delhi Daredevils : ஜேசன் ராய், கௌதம் கம்பீர் (கே), ஷ்ரியாஸ் ஐயர், ரிஷாப் பன்ட் (வி), க்ளென் மேக்ஸ்வெல், ராகுல் திவாடியா, கிறிஸ் மோரிஸ், விஜய் ஷங்கர், ஷாபாஸ் நதேம், ஹர்ஷல் படேல், ட்ரென்ட் போல்ட், கொலின் முர்ரோ, முகமது ஷமி அமித் மிஸ்ரா, ப்ரித்வி ஷா, அவேஷ் கான், டேனியல் கிறிஸ்டியன், ஜெயந்த் யாதவ், குர்கீரத் சிங் மேன், மஞ்சோத் கல்ரா, அபிஷேக் ஷர்மா, சந்தீப் லேமிச்சேன், நாமன் ஓஜா, சயான் கோஷ், லியாம் பிளன்கெட்

 

 

Trending News