IPL 2018:டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு!

IPL 2018 தொடரின் 30_வது லீக் போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதுகின்றன!

Last Updated : Apr 30, 2018, 09:12 PM IST
IPL 2018:டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு! title=

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.

இத்தொடரின் 30_வது லீக் போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதுகின்றன. புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது.

இதுவரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றியையும், 2 தோல்வியையும் பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

அதேபோல டெல்லி அணி தான் விளையாடிய 7 போட்டிகளில் 2-ல் வெற்றிப்பெற்று, 5-ல் தோல்வியை தழுவியுள்ளது. நான்கு புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது!

Trending News