IPL 2018: டாஸ் வென்ற சென்னை அணி முதலில் ஃபவுலிங்

இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றது. 

Last Updated : May 18, 2018, 07:53 PM IST
IPL 2018: டாஸ் வென்ற சென்னை அணி முதலில் ஃபவுலிங் title=

இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற சென்னை அணி டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

 

 


IPL 2018 தொடரின் இன்று 52-வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மோத உள்ளன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது.

டெல்லி அணி இதுவரை தான் விளையாடிய 12 போட்டிகளில் 3இல் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. டெல்லி அணியின் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அந்த அணி தொடர்ந்து வெற்றிகளை பெற முடியாமல் திணறி வருகிறது. டெல்லி அணி ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துவிட்டாலும், தன் வெற்றியின் எண்ணிக்கையை உயர்த்த விரும்பும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை.

டோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை தான் விளையாடிய 12 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் தற்போது பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை எட்டிவிட்ட சென்னை அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் டாப்-2 இடத்தை உறுதி செய்துவிடும்.

இந்த தொடரில் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது போட்டி இதுவாகும். முன்னதாக நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் சென்னை அணியின் ஆதிக்கம் இந்த போட்டியில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும், இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News