Mutton-க்கு பதிலாக Chicken சமைத்ததால் கொடூர கொலை!

ஹோலி பண்டிகை அன்று சிக்கன் பிரியாணிக்கு பதிலாக மட்டன் பிரியாணி செய்ததால் அப்பாவி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Mar 4, 2018, 06:33 PM IST
Mutton-க்கு பதிலாக Chicken சமைத்ததால் கொடூர கொலை! title=

ஹோலி பண்டிகை அன்று சிக்கன் பிரியாணிக்கு பதிலாக மட்டன் பிரியாணி செய்ததால் அப்பாவி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்!

மாகாராஸ்டிராவின் நல்லாஸபுராப் பகுதியின் துலிஞ்சி பகுதியில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.

சம்பவத்தன்று பலியான வினோத் சிங், தன் நண்பர்களுக்கு சிக்கன் பிரியாணி செய்து தருவதாக கூறி வாக்களித்துள்ளார். ஆனால் அவரின் நண்பர்கள் ஹோலி பண்டிகை முடித்துவிட்டு வந்து பார்க்கையில் வினோத் சிக்கன் பிரியாணிக்கு பதிலாக மட்டன் பிரியானி செய்து வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் கொண்ட நண்பர்கள் 4 பேரும் வினோத் சிங்-கை தாக்கியதில் அவர் பலியானார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை தாக்கிய நண்பர்கள் 4 பேரும் மது அருந்தியிருந்தனர் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Trending News