ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்...!
ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமையால் பெண் கொல்லப்பட்ட வழக்கை CBI விசாரணைக்கு மாற்றி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத் உத்த்ரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உயர் வகுப்பை சேர்ந்த 4 பேர் 20 வயது தலித் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கழுத்து மற்றும் இடுப்பை உடைத்து, நாக்கை வெட்டி அந்த பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே உயிரிழந்த பெண்ணின் உடலை அவரது பெற்றோருக்கு தெரியாமலேயே போலீசார் எரித்து விட்டதாகவும் சர்ச்சை ஏற்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்ற போது, அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அப்போது ராகுலை போலீசார் நடத்திய விதம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனிடையே பல்வேறு தடைகளை தாண்டி ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினர்.
ALSO READ | ரிலையன்ஸ் COVID-19 டெஸ்ட் கிட் மூலம் முடிவுகளை இனி 2 மணி நேரத்தில் பெறலாம்..!
இது குறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், "வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் மகளை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியவில்லை என்று வருந்தினர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது பொறுப்பை புரிந்து கொள்ள வேண்டும். நீதி வழங்கப்படும் வரை, இந்த போராட்டத்தை நாங்கள் தொடருவோம், இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சி தலைவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பையும் விரும்புகிறார்கள்" என்றார்.
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுத்து வருகிறார். முதலில், அவர் வெள்ளிக்கிழமை இரவு ஹத்ராஸின் எஸ்.பி., சி.ஓ உள்ளிட்ட ஐந்து போலீசார் மீது நடவடிக்கை எடுத்தார். யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஹத்ராஸ் எஸ்.பி. விக்ராந்த் வீர் மற்றும் அப்போதைய சி.ஓ.ராம் ஷாபாத் உள்ளிட்ட ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரிக்க உள்துறை செயலாளர் பகவான் ஸ்வரூப்பின் தலைமையில் அமைக்கப்பட்ட எஸ்ஐடியின் முதல் அறிக்கையைப் பெறுவது குறித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை தாமதமாக, முழு வழக்குக்கும் CBI விசாரணையை அவர் பரிந்துரைத்தார்.
हाथरस की दुर्भाग्यपूर्ण घटना और जुड़े सभी बिंदुओं की गहन पड़ताल के उद्देश्य से @UPGovt इस प्रकरण की विवेचना केंद्रीय अन्वेषण ब्यूरो (CBI) के माध्यम से कराने की संस्तुति कर रही है।
इस घटना के लिए जिम्मेदार सभी लोगों को कठोरतम सजा दिलाने के लिए हम संकल्पबद्ध हैं।
— Yogi Adityanath (@myogiadityanath) October 3, 2020