முஸ்லீம் இளைஞரை காதலித்த இந்து இளம்பெண்ணை, உத்திரபிரதேச காவல்துறையினர் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
Piyush Rai என்பவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... மீரட் சேர்ந்த இந்த இளம்பெண்ணை விஷ்வ இந்து பரிசத் குண்டர்களிடன் இருந்து மீட்ட காவல்துறை அதிகாரிகள், அவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியும், அடித்தும் துன்புறுத்தியுள்ளனர்." என குறிப்பிட்டுள்ளார்.
The incident had happened on Sunday. The girl, after two spell of harassment and assault, was detained at the police station on NO charges and was let off in the evening only after her parents arrived. Meanwhile, the VHP thugs created ruckus and @uppolice looked the other way.
— Piyush Rai (@PiyushRaiTOI) September 25, 2018
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி மீரட் நகரில் பிடிப்பட்ட இந்த இந்து-முஸ்லீம் ஜோடியினை விஷ்வ இந்த பரிசத் அமைப்பினர் சிறை பிடித்து வைத்துள்ளனர். இவர்களிடன் இருந்து உத்திர பிரதேச காவல்துறை அதிகாரிகள் இளம்பெண்ணை மீட்டுள்ளனர், எனினும் காவல்துறையினரும் குண்டர்களைப் போல் நடந்துக்கொண்டுள்ளனர்.
Meerut: Three police personnel including a woman constable suspended after a video of them abusing and slapping a woman for being friends with a Muslim man, went viral pic.twitter.com/ypqO5dxFbK
— ANI UP (@ANINewsUP) September 25, 2018
சமூக ஊடகங்களில் வைரலாக சென்ற இந்த வீடியோ, உத்திரபிரதேச காவல்துறை வரை எட்டியுள்ளது,. இதன் விளைவாக இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட பெண் காவலர் உள்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்!