என்.ஆர்.சி காரணமாக அசாமில் 100 பேர் பலி; அச்சத்தால் மேற்கு வங்கத்தில் 31 பேர் பலி: மம்தா பானர்ஜி

என்.ஆர்.சி காரணமாக அசாமில் 100 பேர் இறந்துள்ளனர். வெறும் பயத்தின் காரணமாக மட்டும் மேற்கு வங்கத்தில் 31 பேர் பலியாகி உள்ளதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 4, 2020, 04:58 PM IST
  • மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி.யின் சாக்கில் மத்திய அரசை தாக்கினார்
  • அசாமில் என்.ஆர்.சி காரணமாக 100 பேர் இறந்ததாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்
  • கருத்து வேறுபாடு உள்ள ஒவ்வொரு நபரையும் பாஜக அச்சுறுத்துகிறது என்று மம்தா குற்றம் சாட்டினார்.
  • உங்களிடம் ஆதார் அட்டையைச் சமர்ப்பிக்கச் சொன்னால் அல்லது குடும்பத்தினரின் அடையாள அட்டைகளை கேட்டால் காட்ட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
என்.ஆர்.சி காரணமாக அசாமில் 100 பேர் பலி; அச்சத்தால் மேற்கு வங்கத்தில் 31 பேர் பலி: மம்தா பானர்ஜி title=

நாடியா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (செவ்வாய்க்கிழமை) குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி. -க்கு எதிராக அமைதியான நுரையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அவர் கூறினார். அசாமில் என்.ஆர்.சி காரணமாக 100 பேர் இதுவரை இறந்துள்ளனர். அதேபோல வெறும் பயத்தின் காரணமாக மட்டும் மேற்கு வங்கத்தில் 31 பேர் பலியாகி உள்ளதாக அவர் கூறினார். தன்னுடன் உடன்படாத அனைவரையும் அச்சுறுத்துவதற்கு பாஜக முயற்சிப்பதாக மம்தா குற்றம் சாட்டினார்.

மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, “அசாமில் என்.ஆர்.சி காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேற்கு வங்கத்தில், என்.ஆர்.சி.க்கு பயந்து 31 அல்லது 32 பேர் இறந்தனர். அமைதியான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. "பாஜக அதை ஏற்காத அனைவரையும் அச்சுறுத்த முயற்சிக்கிறது" என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

அடையாள அட்டைகளை" கொடுக்கக்கூடாது:
"புதிய வரி முறையால் மக்களை ஏமாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது" என்று அவர் கூறினார். மக்களிடையே வெறுப்பை பரப்பும் குழுவில் நான் இல்லை என்று மம்தா கூறினார். பேரணியில் கலந்து கொண்ட மக்களிடம் எந்தவித ஆவணத்தைக் காட்டக் கூடாது என்று மம்தா கூறினார். யாராவது உங்களிடம் ஆதார் அட்டையைச் சமர்ப்பிக்கச் சொன்னால் அல்லது உங்கள் குடும்பத்தினரின் அடையாள அட்டைகளை கேட்டால், அதை அவரிடம் கொடுக்க வேண்டாம். நான் உங்களுக்கு நேரடியாகச் சொல்லாத வரை, நீங்கள் எந்தவிதமான ஆவணங்களையும் கொடுக்கக்கூடாது என்றார். 

 

தேசிய அளவில் என்.ஆர்.சி.யைக் கொண்டுவருவது குறித்து எந்த முடிவும் இல்லை:
தேசிய அளவில் என்.ஆர்.சி கொண்டுவர இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) மக்களவையில் கூறியதை அடுத்து, மம்தா பானர்ஜியின் அறிக்கை வந்துள்ளது. சபையில் சந்தன் சிங் மற்றும் நாமா நாகேஸ்வர ராவ் ஆகியோரின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ அளித்த பதிலில் உள்துறை அமைச்சர் நித்யானந்த ராய் இந்த தகவலை வழங்கினார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் (சிஏஏ) மற்றும் என்ஆர்சி பிரச்சினைக்கு எதிராக நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நேரத்தில் மத்திய அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

"தேசிய அளவில் என்.ஆர்.சி சட்டத்தை கொண்டு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்று ராய் கூறினார். நாடு முழுவதும் என்.ஆர்.சி.யைக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்திற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா என்று உறுப்பினர்கள் கேட்டார்கள். குறிப்பிடத்தக்க வகையில், டிசம்பர் 22 அன்று, பிரதமர் நரேந்திர மோடியும், 2014 ல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அது பாராளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ விவாதிக்கப்படவில்லை என்றும் கூறினார். ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்வில் தனது உரையில் என்.ஆர்.சி பற்றி குறிப்பிடவில்லை.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News