அமெரிக்காவின் முன்னாள் மந்திரியான ஹிலாரி கிளிண்டன் 3 நாள் பயணமாக மத்தியப்பிரதேசத்திற்கு வந்தார். அவர் இந்தியா வரக்காரணம் கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி அடைந்த காரணத்தையும், அதிபர் டிரம்ப் எப்படி வெற்றி பெற்றார் என்ற காரணத்தையும் புத்தகமாக எழுதி உள்ளார். அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்காக இந்தியா வந்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாண்டு நகரில் உள்ள பழங்கால அரண்மனையான ஜாகஸ் மகாலிற்கு சென்றார். அங்குள்ள பல இடங்களை சுற்றிப்பார்த்தார். அப்பொழுது படிக்கட்டில் நடந்து வரும் போது எதிர்பாரத விதமாக கால் தடுமாறி இருமுறை ஹிலாரி கிளின்டன் கிழே விழுந்தார்.
அவருடன் வந்த உறுப்பினர் அவரை கீழே விழாமல் பிடித்துக்கொண்டார். பின்னர் இரண்டாவது உதவியாளரும் அவரை கை தாங்களாக பிடித்துக்கொண்டார். இந்தக்காட்சியை அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.
தற்போது அந்த கட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.