நாட்டின் நலன் கருதி 1955-ல் உருவாக்கப்பட்ட குடியுரிமைச்சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்க்கு காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். குடியுரிமைச் சட்ட மசோதாவில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனக் கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மக்களவையில் குரல் எழுப்பினர்.
இதற்கிடையே, குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி ஒருவர் பிரதமர் மோடியின் உருவம் கொண்ட முகமூடியை அணிந்துக்கொண்டு, கையில் தடியை எடுத்துக்கொண்டு, தரையில் அமர்ந்திருக்கும் மற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களை அடுத்து விரட்டுவதை போல பாவனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
All India Trinamool Congress (TMC) MPs protest against the Citizenship Amendment Bill, 2016 in the Parliament premises. pic.twitter.com/jlww8BjFfO
— ANI (@ANI) January 8, 2019
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனக்கூறி, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.