தீஸ் அசாரி விவாகரத்தில், வழக்கறிஞர்களுக்கும் டெல்லி காவல்துறையினருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு பயனளிக்காத நிலையில் பணி தவிர்ப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
வழக்கறிஞர்களுக்கும் டெல்லி காவல்துறையினருக்கும் இடையிலான சந்திப்பு எந்தவொரு தீர்மானத்தையும் கொண்டு வராத நிலையில், திங்களன்று தேசிய தலைநகரில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்கிஞர்கள் பணியைத் தவிர்ப்பதன் மூலம் தொடர்ந்து போராட்டத்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் பார் அசோசியேஷன்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் திர் சிங் கசானா தெரிவிக்கையில்., "எங்கள் ஒத்துழைப்பு இருந்தபோதிலும், வழக்கறிஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினரை கைது செய்ய எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அனைத்து டெல்லி மாவட்ட நீதிமன்றங்களிலும் அனைத்து வழக்கறிஞர்களும் அமைதியான முறைகளுடனும் முழுமையான பணி விலகலில் ஈடுபடுவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் கூற்றுப்படி, லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜலின் இல்லத்தில் அனைத்து மாவட்ட நீதிமன்ற சங்கங்களின் உறுப்பினர்கள், டெல்லி காவல்துறை பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு கூட்டம் நடைபெற்றது, ஆனால் இந்த கூட்டத்தில் எந்த தீர்மானத்தையும் கொண்டு வர முடியவில்லை.
சிறப்பு காவல்துறை ஆணையர்கள் சதீஷ் கோல்ச்சா பிரவீர் ரஞ்சன், இணை ஆணையர் தேவேஷ் ஸ்ரீவஸ்தவா, காவல்துறை துணை ஆணையர் (வடக்கு) மோனிகா பரத்வாஜ், இந்திய பார் கவுன்சில் (பி.சி.ஐ) தலைவர் மனன்குமார் மிஸ்ரா மற்றும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் பார் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்கள் அனைவருடனான இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்றது என கசனா குறிப்பிடுகின்றார்.
இந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் தனது ஒரு உத்தரவில், பொலிஸ் மற்றும் வழக்கறிஞர்களின் பிரதிநிதிகளுக்கு ஒரு கூட்டத்தை நடத்தி, இந்த விவகாரத்தில் ஒரு தீர்மானத்தைக் காணுமாறு அறிவுறுத்தியது.
முன்னதாக., இந்திய பார் கவுன்சில், டெல்லி பார் கவுன்சில் மற்றும் டெல்லியின் மாவட்ட நீதிமன்ற பார் அசோசியேஷன்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டுக் கூட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே எந்தொரு தீர்மானமும் எட்டப்படாத நிலையில், நவம்பர் 8-ஆம் தேதி வழக்கறிஞர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கினர். எனினும் இதுவரையிலும் வழக்கறிஞர்கள் போராட்டதிற்கு உரிய தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.