கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்தது வேதனையளிப்பதாக மு.க.ஸ்டாலின் வருத்தம்..!
அரசின் அலட்சியத்தால் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. முதலமைச்சரின் பொறுப்பின்மையால் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.... கொரோனாவால் 2 மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது.
கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும். சென்னையில் கொரோனாவால் இறந்த 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலை அளிக்கிறது. அரசு உயர் அதிகாரிகளுக்கு இடையேயான பதவி போட்டியை தடுக்க வேண்டும். அமைச்சர்கள் இடையிலான குழு சண்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது.
READ | PAN Card வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்!! ரூ .10,000 வரை அபராதம்
கொரோனாவை பற்றிய எந்த புதிலும் இல்லாமல் முதலமைச்சர் உள்ளார். இந்நிலையில், முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் 5 கேள்விகளை முன்வைத்துள்ளார். அவை :
1. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்?
2. தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்றால் ஏன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
3. ஊரடங்கின் போது குழுவுக்கு மேல் குழு என அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் எங்கே?.
4. எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமாக ஆலோசிக்க அரசு ஏன் தயங்குகிறது?
5. பொருளாதார மீட்பு, வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய எப்போது அரசு ஆர்வம் காட்டும்?
என்னுடைய கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.