கடவுளின் தேசம் என்று கொண்டாடப்படும் கேரள மாநிலத்தின் மீது காதல் கொள்ளாத மனிதர்கள் இருக்கவே முடியாது இந்தியாவையும் தாண்டி உலக நாடுகளிலும் கேரளா மீதும் அங்கு இருக்கக்கூடிய இயற்கை சூழல் மீதும் தீரா தாகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நேந்திரம் சிப்ஸ், தென்னங்கள்ளு, பீஃப் கரியுடன் பொரோட்டா, இதுபோன்றவை உணவுகளில் அங்கு மிகவும் ஸ்பெஷல். கேரள பெண்களும் அவர்களின் கூந்தல் அழகுக்கும் பலர் அடிமையாவதும் உண்டு.
இப்படி பல்வேறு காரணங்களால் சிறப்பு பெற்ற கேரள மாநிலம் மாந்திரீகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நவீன காலகட்டத்திலும் கேரள மாந்தீரகவாதி என்று சொன்னால் கால் நடுங்காத்தான் செய்கிறது. வசியம் செய்ய வேண்டுமா, சொத்து பிரச்னை தீர வேண்டுமா, காதல் கைகூட வேண்டுமா அனைத்திற்கும் ஒரே தீர்வு கேரளா மாந்திரீகம்தான் என்று நம்பும் பட்டம் பெற்ற பல மேதைகள் கூட இன்றும் நம்புவது உண்டு.
மேலும் படிக்க | Tasty Saree: இந்த சேலை கட்டுவதற்கு மட்டுமல்ல! சாப்பிடுவதற்கும் சுவையான புடவை!!
இந்த கேரள மாந்திரீகத்தால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுவதாகவும், பல கொலை குற்ற சம்பவங்கள் நடப்பதாகவும் கூறி கடந்த 2014ஆம் ஆண்டு கேரள மாநில உம்மன்சாண்டி அரசு மூட நம்பிக்கை தடுப்பு சட்டத்தையும் இயற்றியது. ஆனால் இன்றும் கேரள மாந்திரீக பிஸ்னஸ் கலை கட்டிக்கொண்டுதான் இருக்கிறது. இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு கூட சிந்தை இல்லாத பலரும் பல லட்சங்களை இழந்து ஏமாற்றம் அடைவதாக ஏராளமான செய்திகள் நாள்தோறும் வந்துகொண்டுதான் இருக்கிறது.
கேரள மாந்திரீகவாதி என்று பீலா விட்டு பணத்தை ஆட்டை போடும் கும்பலிடம் சிக்கி மோசம் போவதில் தமிழக மக்கள் முதலிடத்தை பிடித்துள்ளார்கள் என்பது வேதனைக்குறிய விஷயமாகத்தான் இருக்கிறது.சமீபத்தில்கூட ஈரோட்டை சேர்ந்த நபர் ஒருவர் சொத்து விவகாரம் தொடர்பாக கேரள மாந்திரீகவாதியிடம் சென்றுள்ளார். அவர் செருக செருக பணத்தை இவரிடம் இருந்து கரக்கவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்து அதன் பின்பு ஞானம் வந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேலும் படிக்க | அடுத்தடுத்து வரும் அணைப் பிரச்சினைகள்: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அங்கு நடந்துதான் வருகிறது. ஆனால் அங்கேயே உள்ள கேரள மக்கள் இதுபோன்ற சம்பவங்களில் அதிகம் சிக்குவது இல்லை எனவும் வெளி மாநிலத்தை சேர்ந்த மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபோன்ற மூட நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் என்பதே அறிவு சூழ் சமூகத்தின் தேவையாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR