சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்....
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 2 பெண்கள், 300 போலீஸ் பாதுகாப்புடன் இன்று நுழைய இருந்தனர். அவர்கள் கோயிலுக்கு மிக அருகில் சென்ற போது, போராட்டக்காரர்கள் பெரும் அளவு கூடி, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரண்டு பெண்களும் சபரிமலையிலிருந்து திரும்பி செல்ல உத்தரவிட்டத்து கேரளா அரசு.
பெண்கள் உள்ளே நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் என சபரிமலை கோயில் தந்திரி கூறியதை அடுத்து, 2 பெண்களும் திரும்பி செல்ல சம்மதம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து போலீசார் 2 பெண்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பம்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதை தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் போராட்டதை கைவிட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து 18 ஆம் படியின்கீழ் அர்ச்சகர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக 3 மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி-க்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சபரிமலையில் செய்யவேண்டும். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் சில தடை உத்தரவுகளை பிறப்பிக்கலாம். சமூக வலைதளங்கள், வலைதளங்கள் சேவையை முடக்கலாம் எனவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 3 மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.
In a letter dated, 16 Oct MHA had asked Chief Secretaries&DGPs of Kerala, Tamil Nadu&Karnataka to take necessary measures to maintain law&order & 'prevent any untoward incident'. Letter also states 'Hindu outfits plan to organise protest prog on 17.10 at Nilakkal&Erumali village' pic.twitter.com/9CjsEjdDZz
— ANI (@ANI) October 19, 2018