தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே மீதம் உள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர் கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்!
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... "ஆழ்ந்த யோசனைக்கு பின்னரே நான் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைந்தேன். பிராந்திய வளர்ச்சிக்காக கட்சி தலைமையிடம் பலமுறை விவாதித்தேன், பயனில்லை. எனவே கனத்த இதயத்துடன் கட்சியை விட்டு விலகுவதென்று முடிவு செய்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
I after introspection of the very reason I joined politics (Regional development) and after many discussion within the the TRS party, with a heavy heart I submitted my resignation to the TRS Party.
— Vishweshwar Reddy K (@VishweshwarRed1) November 20, 2018
தெலங்கானா செவ்வேலா தொகுதியின் MP-யான ரெட்டி, கட்சி தலைமையிடம் கண்ட பல்வேறு கட்ட அதிருப்பதிக்கு பின்னர் இந்த முடிவினை எடுத்திருப்பதாக தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று பக்க ராஜினாமா கடிதத்தினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு அனுப்பியுள்ள ரெட்டி, தனது விலகல் குறித்து முன்னதாக அறிவித்ததாகவும் தெரிகிறது. மேலும் தனது கடிதத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் உண்மை தொண்டர்களுக்கு தலைமை அநீதி இழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு நான் கட்சிக்காக போட்டியிட்டேன், அப்போது நான் கட்சிக்கு தேவைப்பட்டேன் என்பதால். அப்போது எனது கருத்துக்களையும் சித்தாந்தங்களையும் தலைமை ஏற்றுக்கொண்டது. ஆனால் தற்போது அதே நிலைமை நீடிக்கவில்லை என கருதுகிறேன்.
நான் உள்பட தெலங்கானாவிற்கா போராடி தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் நபர்கள் கட்சியில் இருந்து விலக்கிவைக்கப் படுகிறார்கள் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் விரைவில் தனது லோக்சபா உறுப்பினர் பதவியினையும் ராஜினாமா செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
119 தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் வரும் டிசம்பர் 7-ஆம் நாள் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 11-ஆம் நாள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் தேர்தல் வேலைகள் மும்மரமாக நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மூத்த தலைவரது விலகல் கட்சிக்கு பெறும் அடியாக அமையும் என தெரிகிறது.