உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் உள்ளேன் அம்மா என சொல்லாத குழந்தையை ஆசிரியை 40 முறை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காலை வருகைப்பதிவேடு பரிசோதனை செய்யும்போது உள்ளேன் அம்மா என்று பதிலளிக்காத காரணத்திற்காக குழந்தையை இரக்கமின்றி அடித்து உள்ளார் ஆசிரியர்.
குழந்தையின் முகம் வீக்கமாக காணப்பட்ட நிலையில் பெற்றோர்கள் குழந்தையை விசாரித்த போது ஆசிரியர் தன்னை அடித்தது விட்டாதாக குறியுள்ளார். இதை அடுத்து குழந்தையின் நண்பர்களிடம் பெற்றோர் விசாரித்த போது குழந்தை பள்ளியில் ஓவியம் வரைவதில் மிக கவனமாக இருந்த காரணத்தினால் தான் பதிலளிக்க மறந்துவிட்டது என்று கூறினார்கள்.
இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து உள்ளனர். பள்ளி நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்தபோது, ஆசிரியை ரிதிகா வி ஜான் என்பவர் குழந்தையை தாக்கியது பதிவாகியிருந்தது.
#WATCH Teacher of Lucknow's St. John Vianney High School repeatedly slaps a student for not standing up on attendance call pic.twitter.com/DWlPfLhS1I
— ANI UP (@ANINewsUP) August 31, 2017
எனவே குழந்தையின் பெற்றோர் அசிரியர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார்.