இந்தியாவில் இணையம் 1995 இல் தொடங்கிய நிலையில், ஐந்தாவது தலைமுறைக்கான 5ஜி சேவையை வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு மற்றும் புனே போன்ற நகரங்களில் உள்ள அக்டோபர் முதல் சேவை தொடங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 5ஜி ஏலம் நடைபெற்ற நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் 5ஜி அலைக்கற்றைக்கான உரிமையைக் கைப்பற்றியது.இந்தியாவில் 5ஜி சேவை இன்னும் ஒரு மாத காலத்தில் தொடங்கும் என்று தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில், 5ஜி நெட்வொர்க் தொடர்பாக சாமானியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட சர்வேயில் அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் 5ஜி நெட்வொர்க்கை (5G Network) ஏற்க மறுத்துள்ளனர். உண்மையில், இந்த கணக்கெடுப்பை நெட்வொர்க் நுண்ணறிவு மற்றும் இணைப்பு நிறுவனமான Ookla Survey செய்துள்ளது. அய்வில் 89 சதவீதம் பேர் 5G நெட்வொர்க்கை ஏற்க முழுமையாக தயாராக உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
Ookla எடுத்த ஆய்வில், 5G நெட்வொர்கை வரவேற்காத மனநிலையில் சிலர் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் கட்டணமானது மிக அதிகமாக இருக்கும் என 25 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் Ookla எடுத்த ஆய்வில் 24 சதவிகிதம் பேருக்கு 5G பற்றி அதிகம் தெரியாது என்று கூறியுள்ளனர். இது தவிர, 23 சதவீதம் பேர் தங்களிடம் 5ஜி தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் மொபைல் போன் இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் 5ஜி போன்களை வாங்கும் சக்தி எங்களுக்கு இல்லை என சிலர் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | 1G முதல் 5G வரை; உலகையே மாற்றப் போகும் 5G கடந்து வந்த பாதை
இருப்பினும், இந்தியாவில் 5G ஏற்றுக்கொள்ளும் மனம் படைத்தவர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து வருகிறது. இதற்கான பதிலளித்தவர்களில் 70 சதவீதம் பேர் வீடியோ ஸ்ட்ரீமிங்கின் பயன்பாட்டை அதிகரிப்பதாகக் கூறியுள்ளனர். 68 சதவீதம் பேர் தங்கள் மொபைல் கேமிங் அனுபவம் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளனர்.
உலகிலேயே அதிக தரவுகளைப் பயன்படுத்துபவர்களில் இந்தியர்கள் உள்ளனர். இந்தியாவில் மொபைல் பயனர்கள் உலகிலேயே அதிக டேட்டா-இன்டென்சிவ் பயனர்களில் ஒன்றாக இருந்தாலும், இந்தியாவின் 4G/LTE நெட்வொர்க்குகள் தேவைக்கு ஒரு தடையாக மாறிவிட்டன என்று Ookla இன் நிறுவன முதன்மை ஆய்வாளர் சில்வியா கெச்சிச் கூறினார். 5G தொழில்நுட்பத்தில், வேகமான நெட்வொர்க் இணைப்பைத் தாண்டி பல தொழில்நுட்ப வாய்ப்புகள் மற்றும் சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் விரைவில் 5G சேவைகளை வெளியிட உள்ளதால், பயனர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் உள்ளது மற்றும் 89 சதவீதம் பேர் 5ஜி நெட்வொர்க்கிற்கு மேம்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | இந்தியாவில் 5-ஜி கட்டணம் 4ஜி கட்டணத்தை விட எவ்வளவு உயரும் ?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ