மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக ஜனவரி 2-ஆவது வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
CJI Bobde calls Attorney General (AG) KK Venugopal & says there is “unusual request” from lawyer Ashwini Upadhyay who says he visited Jamia & people don't know about the Act, can you publicise the Citizenship Amendment Act? AG says "government authorities can publish the Act". https://t.co/ljeFLPSKzc
— ANI (@ANI) December 18, 2019
2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா இடம்பெயர்ந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வரும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இம்மாநிலத்தில் போராட்டகாரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடைப்பெற்ற கலவரத்தில் இதுவரை 6 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைப்பெற்ற நிலையில்., நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஜனவரி மாதம் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை அதை அமல்படுத்துவதில் பின்வாங்க மறுத்துவிட்டார்.
மேலும், சிறுபான்மையினருக்கு அரசாங்கம் குடியுரிமை வழங்கும் என்று கூறியது பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் அவர்களின் மத நம்பிக்கைகளுக்காக துன்புறுத்தபடுவதால் என குறிப்பிட்ட அவர் புதிய சட்டம் குறித்து நாட்டு மக்களை தவறாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகிறது எனவும் அவர் கண்டித்தார்.
இதற்கிடையில், 19 எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த முயற்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) உள்ள சட்டத்தை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியது. கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களில் உரையாற்றிய காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) மீது முழு நாடும் போராட்டம் நடத்தி வருவதாகவும், வடகிழக்கு மற்றும் டெல்லியில் போராட்டக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கையால் எதிர்க்கட்சிகள் வேதனை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி குழுவில் சமாஜ்வாடி கட்சியின் ராம் கோபால் யாதவ், திமுகவின் டி.ஆர். பாலு, திரிணாமுல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரையன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்டின் சீதாராம் யெச்சூரி ஆகியோர் அடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.