பிரசாந்த் பூஷனுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணுக்கு நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2019, 01:31 PM IST
பிரசாந்த் பூஷனுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம் title=

குரேஷி வழக்கில் ராகேஷ் அஸ்தனாவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இடையே மோதல் வெடித்தது. லஞ்ச புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க வேண்டும் என மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இருவரையும் அழைத்துப் பேசினார். பின்னர் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இருவரையும் கட்டாயா விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு. கடந்த 23 ஆம் நாள் நள்ளிரவு 2 மணியளவில் சிபிஐ-யின் புதிய இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது மத்திய அரசு. 

சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஷ்வர் ராவுக்கு எதிராக பிரஷாந்த் பூஷண் கருத்து கூறியிருந்தார். பிரஷாந்த் பூஷண் கருத்துக்கு எதிராக மத்திய அரசு அவமதிப்பு மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து பிரசாந்த் பூஷனுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம். மீண்டும் இந்த வழக்கு மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

Trending News