செல்ஃபி மோகத்தால் ரயில்மோதி உயிரிழந்த மாணவி.!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற 16 வயது மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Written by - Dayana Rosilin | Last Updated : May 15, 2022, 07:32 PM IST
  • செல்ஃபி மோகத்தால் மாணவி உயிரிழப்பு
  • ரயில் மோதி ஆற்றில் வீசப்பட்ட மாணவி
  • உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆண் நண்பர்
செல்ஃபி மோகத்தால் ரயில்மோதி உயிரிழந்த மாணவி.!  title=

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயதான மாணவி நபாத். இவர் தனது ஆண் நண்பரான இசாமுடன் அங்குள்ள பரோக் ரயில்வே பாலத்திற்கு சென்றுள்ளார். அங்கு நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்த அவர்கள் தங்களது செல்ஃபோனில் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளனர்.

இற்காக ரயில்வே தண்டவாளத்தின் அருகே நின்று போஸ் கொடுக்க முயன்றபோது அவ்வழியாக வந்த மங்கலாரம் - கோயம்பத்துார் விரைவு ரயில் அவர்கள் இருவர் மீதும் மோதியுள்ளது. இதில் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட மாணவி நபாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இவருடன் வந்த ஆண் நண்பர் இசாமுக்கு கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு தண்டவாளப் பகுதியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோழிக்கோடு இரயில்வே போலீசார் இசாமை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மேலும் ஆற்றில் தூக்கி விசப்பட்டு உயிரிழந்த மாணவி நபாத்தின் உடலை மீட்ட போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.செல்ஃபி மோகத்தால் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | இளம்பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் கைது: காவி உடையில் இருந்த கயவனை பிடித்த காவல்துறை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

Trending News