நாளை மாலை 3.30 மணிக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படும்

இன்று ஸ்ரீதேவி உடலை ஒப்படைக்கும் அனுமதி கடிதத்தை துபாய் போலீசார் அளித்தனர்.

Last Updated : Feb 27, 2018, 08:10 PM IST
நாளை மாலை 3.30 மணிக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படும் title=

ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு ஏற்பாடு செய்யப்பட தனி விமானம் தூபாயில் இருந்து புறப்பட்டது.

 

 

நாளை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பொது மக்கள் அஞ்சலிக்காக அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள செலிபெரஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்படும். அதன் பின்னர் நாளை மாலை 3.30 மணிக்கு உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் வில்லேபர்லா மயானத்தில் ஸ்ரீதேவியின் குடும்பத்தாரின் முறைப்படி தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 


ஸ்ரீதேவியின் மரணம் திரைத்துறைக்கு பேரிழப்பு என திரைப்பட தயாரிப்பாளர் மதுர் பண்டார்கர் தெரிவித்துள்ளார்.

 


ஸ்ரீதேவியின் பிறந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்ரீதேவியின் மரண செய்தியை கேட்டு தாங்கள் பெரும் துயரம் அடைந்தததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

 


ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரம் 

 

ஸ்ரீதேவி உடலுக்கு எம்பாமிங் பணி முடிந்தது. இதயனைடுத்து நடிகை ஸ்ரீதேவி உடலை துபாய் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அவரது உடல் இந்தியா கொண்டுவரப்படும். அதாவது அவரது உடல் மும்பை வந்து சேர கிட்டத்தட்ட இரவு 8 மணி ஆகும் எனக் கூறப்படுகிறது. 

 


திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளார். முதலில் மாரடைப்புக் காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியானது. மயங்கிய நிலையில் நீர் நிரம்பிய குளியல் தொட்டியில் அவர் கிடந்தார் என கூறப்பட்டது. 

மும்பையில் ஸ்ரீதேவின் இறுதிச்சடங்குகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. நேற்று இரவு ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட இருப்பதாகவும், அதற்க்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.மேலும் அவரது உடலை கொண்டுவர இந்தியாவில் இருந்து தனி விமானம் ஒன்று துபாய்க்கு அனுப்பபட்டது என தகவல் வெளியானது.

ஆனால் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோரிடம் துபாயில் அரசு தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதால், நேற்றிரவு ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. 

இதைக்குறித்து துபாய் போலீஸ் கூறியது, சந்தேகத்துக்கு இடமின்றி மரணம் நிரூபிக்கப்பட்டால் தான் உடல் ஒப்படைக்கப்படும். தேவைப்பட்டால் மீண்டும் பிரேத பரிசோதனை செய்வோம். மறுவிசாரணையும்  நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று ஸ்ரீதேவி உடலை ஒப்படைக்கும் அனுமதி கடிதம் கிடைத்தது. அதில், ஸ்ரீதேவி மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என துபாய் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீதேவி உடலை எம்பாமிங் செய்யப்பட்ட பின்னர், அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். எனவே, இன்று ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்படும் என தகவல் வந்துள்ளது.

 

 

Trending News