இந்திய உளவுத்துறை 'RAW' தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக'' இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா குற்றம்சாட்டியதாக வெளியான செய்திக்கு ஒன்றை இலங்கை அரசு மறுப்பு...
இந்திய உளவு அமைப்பான RAW தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையின் வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் சிறீசேன பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா, இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா முயற்சி செய்து வருவதாக கூறினார். மேலும், இந்திய உளவு அமைப்பான RAW தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
ஆனால், இந்தத் திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் மோடிக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரத்தில் இந்தியா வர உள்ள நிலையில், தனியார் பத்திரிக்கை ஒன்றால் வெளியான இந்தச் செய்தி இந்தியா - இலங்கை இடையேயான நல்லுறவை பாதிக்க செய்யும் வகையில் பேசப்பட்டது.
இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன கூறியதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசே இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிபா் சிறிசேனா இதுபோன்று கூறவே இல்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்ட 'ரா' அமைப்பைச் சேர்ந்த நபா் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதை முன் வைத்து இரு நாட்டு உறவில் பிளவு ஏற்படுத்த சிலா் முயற்சிப்பதாக சிறிசேனா அந்தக் கூட்டத்தில் கூறியதாக இலங்கைத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Sri Lankan President Maithripala Sirisena's Advisor and Coordinating Secretary, Shiral Lakthilaka rubbished media reports that claimed President had named Indian intelligence agency, RAW, for hatching an assassination plot against him
Read @ANI story | https://t.co/BPkdhuXZPR pic.twitter.com/qj38TrJM2E
— ANI Digital (@ani_digital) October 17, 2018