மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில், ஏப்ரல் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்றைய மாநாட்டின்போது கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 3-வது முறையாக சீதாராம் யெச்சூரி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். 69 வயதாக சீதாராம் யெச்சூரி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார்.
மேலும் படிக்க | மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு : கேரள அமைச்சர்..!
Comrade Sitaram Yechury has been re-elected as General Secretary of the CPI(M) in the 23rd CPI(M) Party Congress. Red Salute Comrade Sitaram Yechury. pic.twitter.com/Lo4Qfj9G40
— CPI (M) (@cpimspeak) April 10, 2022
பொதுச்செயலாளரைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய உறுப்பினர்களும், இந்த மாநாட்டின்போது தேர்வு செய்யப்பட்டனர். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாக சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பிருந்தா காரத், பினராயி விஜயன், கொடியேரி பாலகிருஷ்ணன், ஜி ராமகிருஷ்ணன், மாணிக் சர்க்கார், முகமது சலீம், சூர்ய காந்த் மிஸ்ரா, தபன் சென், பி.வி.ராகவலு, நிலோத்பால் பாசு, எம்ஏ பேபி, சுபாஷினி அலி, ராமச்சந்திர தோம், அசோக் தவாலே, ஏ.விஜயராகவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மலையாள மொழியில் தனது உரையைத் தொடங்கிய அவர், மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் எனும் தலைப்பில் உரையாற்றினார். மத்திய அரசை எதிர்க்க அரசியல் கசப்புகளை மறந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்திய ஸ்டாலின், முதலில் தென்மாநிலங்களின் முதலமைச்சர்கள் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், இந்தியாவைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே பாஜகவின் எண்ணம் - சீத்தாராம் யெச்சூரி!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR