இந்தியாவிற்கு சொந்தமான டோகாலா பகுதியை ஆக்கிரமிக்க முயற்சியில் சீனா இராணுவம் அத்துமீறியது. இதனை தடுக்க இந்திய ராணுவம் அங்கு நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, உடனே இந்தியா தனது துருப்புகளை திரும்ப பெற வேண்டும் என்றும், 1962-ம் ஆண்டு நடந்த போரின் விளைவுகளை இந்தியாவிற்கு ஞாபகம் இருக்கும் எனவும் மிரட்டல் தோனியில் கூறியது.
ஆனால் இந்தியா தங்கள் படைகளை திரும்ப பெற மாட்டோம் என கூறி விட்டது. இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், சீனாவின் அரசு மீடியாவான குளோபல் டைம்ஸ், இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம் என கூறி உள்ளது.