CBI புதிய இயக்குனர் நியமனம்; ஜன., 24-ல் சிறப்பு கூட்டம்!

CBI-ன் புதிய இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக, வரும் ஜனவரி 24-ஆம் நாள் டெல்லியில் பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் கூடுகிறது.

Last Updated : Jan 16, 2019, 06:32 PM IST
CBI புதிய இயக்குனர் நியமனம்; ஜன., 24-ல் சிறப்பு கூட்டம்! title=

CBI-ன் புதிய இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக, வரும் ஜனவரி 24-ஆம் நாள் டெல்லியில் பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் கூடுகிறது.

CBI-ன் முன்னாள் இயக்குனர் அலோக் வர்மாமற்றும் ராகேஷ் அஸ்தானாவிற்கு இடையே ஏற்பட்ட பனிப்போரால் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு. மேலும் CBI-ன் இடைக்கால இயக்குனராக நாகேஷ்வர ராவ்-னை நியமித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மீண்டும் அலோக் வர்மாவை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா டெல்லி CBI தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் CBI இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கிடையே, CBI இயக்குனர் அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி ஆலோசிக்க டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நியமனக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில், CBI இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அவரை தீயணைப்புத்துறை இயக்குனராக மாற்றம் செய்ய முடிவு செய்தது. இந்த முடிவை ஏற்க மறுத்த அலோக் வர்மா தனது பதவியினை ராஜினாமா செய்தார்.  

இதனையடுத்து இடைக்கால CBI இயக்குனராக நாகேஷ்வர ராவ் மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், புதிய CBI இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக, வரும் ஜனவரி 24-ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்து புதிய இயக்குனரை நியபிப்பர் என தெரிகிறது.

Trending News