குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 -ம் தேதியுடன் முடிவடைகிறது. நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
குடியரசுத் தலைவர் வேட்பாளரை பாஜக அறிவிக்காத நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்யலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான முயற்சிகளை பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாளை அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் காங்கிரசும் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மற்றொரு பக்கம் காங்கிரசும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்து வருகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகாஜூன கார்கே சந்தித்துப் பேசிய நிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவரை அறிவிப்பதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் பேசிய சரத் பவார், குடியரசுத் தலைவர் பதவிக்கு தான் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் பாஜக முன்னிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதால், சரத் பவார் தோல்வியை சந்திக்க விரும்ப வில்லை எனவும், அதன் காரணமாகவே காங்கிரசின் அழைப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதே போல் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியான நிலையில் அவர் அதனை மறுத்துள்ளார். பீகார் மக்களுக்கு சேவை செய்து வருவதால், குடியரசுத் தலைவர் பதவியில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் நிதிஷ் குமார் கூறியுள்ளார். பல மாதங்களாக ஊகங்கள் அடிப்படையில் பல்வேறு தகவல் வெளியாகி வருவதாகவும், இதில் தனக்கு எவ்வித சம்மந்தமும் இல்லை எனவும் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | உத்தரப்பிரதேச வன்முறை: இதுவரை 316 பேர் கைது; புல்டோசரால் குறி வைக்கப்படும் வீடுகள்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR