டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.2 என கடும் வீழ்ச்சி கண்டுள்ளது!
துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்தி அமெரிக்கா ஆணை பிரப்பித்தது. இதன் காரணமாக துருக்கியின் பணமதிப்பு வெகுவாக சரிந்து, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்நியச் செலாவணி சந்தையில், திங்கட்கிழமை வர்த்தக முடிவில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 43 பைசாக்கள் அளவுக்கு சரிந்து, 72 ரூபாய் 63 காசுகளாக இருந்தது. மேலும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 81 டாலர்களை கடந்துள்ளது. பிற வெளிநாட்டு நாணய மதிப்புகளுக்கு நிகராக டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது.
இதன் விளைவாகவும், இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவை அதிகரித்ததன் காரணமாகவும், ரூபாயின் மதிப்பு இன்று காலை முதல் கடும் வீழ்ச்சி கண்டு 74.02-ஆக உள்ளது. பங்குச்சந்தைகளிலும் இன்றைய வர்த்தகம் லேசான சரிவுடனே காணப்பட்டது.