குவஹாத்தி: அஸ்ஸாமில் குவாஹாட்டி தேயிலை ஏல மையத்தில் (GTAC) வியாழனன்று ஒரு அரிய வகை தேநீர் ஒரு கிலோ ரூ .75,000 என்ற விலையில் விற்கப்பட்டது. மனோஹரி கோல்ட் டீ என அழைக்கப்படும் இந்த சிறப்பு தேநீர், மேல் அசாமின் (Assam) திப்ருகார் மாவட்டத்தில் உள்ள மனோஹரி தேயிலை தோட்டத்தால் தயாரிக்கப்படுகிறது.
உலகளாவிய கொரோனா தொற்று மற்றும் அசாம் தேயிலைத் தொழிலில் அதன் தாக்கத்திற்கு மத்தியில் இந்த விற்பனை நம்பிக்கையின் கதிராக வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த தேநீரின் சிறப்பு என்ன? கிழக்கு அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள மனோஹரி தேயிலை தோட்டத்தின் இயக்குனர் ராஜன் லோஹியா, இந்த தேநீர் (Tea) மிகச்சிறந்த இரண்டாவது பறிப்பு கர்னல் தேயிலை மொட்டுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றும் அவை விடியற்காலையில் மட்டுமே பறிக்கப்படுகின்றன என்றும் டெக்கான் ஹெரால்டிடம் கூறினார்.
ALSO READ: Health News: உடல் எடை குறைய Black Coffee-யா, Green Tea-யா? எது சிறந்தது?
"சூரிய ஒளியில் வெளிப்படுவதைத் தவிர்ப்பதற்காக விடியற்காலையில் மட்டுமே அவை பறிக்கப்படுகின்றன. இவை நறுமணமுள்ள, பிரகாசமான மஞ்சள் நிற பானங்களை வழங்குகின்றன” என்று அவர் கூறினார்.
இந்த தேநீரை காண்டெம்பரரி புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் விற்றது. குவஹாத்தியைச் சேர்ந்த தேயிலை வர்த்தகர் விஷ்ணு தேயிலை நிறுவனம் இதை வாங்கியது. இந்த நிறுவனம் தேயிலையை தங்கள் டிஜிட்டல் இ-காமர்ஸ் வலைத்தளமான 9amtea.com இல் உலகம் முழுவதும் விற்கும் என குவாஹாட்டி தேயிலை ஏல தரகர்கள் சங்கத்தின் செயலாளர் தினேஷ் பிஹானி கூறினார்.
"உலகளாவிய தொற்றுநோய்களுக்கு மத்தியில் முழு உலகமும் பாதிக்கப்பட்டிருக்கும் போது, இது ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது. மனோஹரி தேயிலை தோட்டம் இந்த சிறப்பு தேயிலையை செப்டம்பர் மாதத்தில் தயாரிக்க கூடுதல் முயற்சி செய்து அதை ஜி.டி.ஐ.சிக்கு விற்பனைக்கு அனுப்பியுள்ளது” என்று ஜி.டி.ஏ.ஏ.ஏ செயலாளர் தெரிவித்தார்.
தேயிலை விற்பனைக்கான முந்தைய சாதனையும் கடந்த ஆண்டு இதே தேயிலைத் தோட்டத்தால்தான் செய்யப்பட்டது. அப்போது ஒரு கிலோ ரூ .50,000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி, மற்றொரு சிறப்பு அஸ்ஸாம் தேநீர் நிறுவனமான அப்பர் அசாமின் டிகோம் தேயிலைத் தோட்டம் தனது கோல்டன் பட்டர்ஃப்ளை தேயிலையை குவாஹாட்டி தேயிலை ஏல மையத்தில் 75,000 ரூபாய் விலையில் விற்று சாதனை படைத்தது.
ALSO READ: ஆபரேஷன் செய்யும் போது மருத்துவர்கள் ஏன் நீலம் அல்லது பச்சை நிற ஆடையை அணிகிறார்கள்..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR