காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என அக்கட்சிக்குள் கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தது.
70 வயததை கடந்த சோனியா காந்தி அவர்கள் 1998ம் ஆண்டு மார்ச் 14ல் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்றுள்ளர். மேலும், தலைவராக அவர் 19 ஆண்டுகள் நீடித்துள்ளார். இந்த நிலையில்,அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் ராகுலை தலைவராக நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராகுல் காந்தி கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 19ந்தேதி முதல் துணை தலைவராக பதவி வகித்தார். 4 ஆண்டுகளுக்கும் மேல் பதவியில் நீடித்து வரும் அவர் தலைவராவதற்கு காரிய கமிட்டியின் முறையான ஒப்புதல் பெற வேண்டும். அதன்படி டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் காரியகமிட்டிகூட்டம் இன்று கூடியது.
இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர் இதில், ராகுல் காந்தியை தலைவராக தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேறிய நிலையில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிட வாய்ப்பில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
கட்சி தலைவர் பதவிக்கான வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 16-ல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4.தேர்தல் முடிவுகள் 19ந்தேதி அறிவிக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.