16-வது மக்களவையின் கடைசி அலுவல் நாளான இன்று பிரதம மந்திரி நரேந்திர மோடி பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, 2014-ல் நானும் முதல் முறையாக பாராளுமன்றத்திற்கு வந்தேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இல்லாத ஒரு அரசு மத்தியில் ஆட்சி அமைத்தது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தனிப்பட்ட கட்சி பெரும்பான்மை பெற்றது. மக்களவையின் அனைத்து உறுப்பினர்கள் சார்பில் நடவடிக்கைகளை மிகச் சிறப்பாக கையாண்ட சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
16வது மக்களவை 8வது அமர்வு வரை நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் எனது அரசு 100 சதவீதம் வேலை செய்தது என்று பிரதமர் மோடி கூறினார். 16வது மக்களவையில் அதிக பெண்கள் இடம்பெற்றனர். இதில் 44 பெண்கள் எம்.பி.க்கள் முதன் முறையாக எங்கள் அரசு தேர்ந்தெடுத்தது. எங்கள் ஆட்சியில் தான் பெண்களுக்கு முக்கிய மற்றும் நாட்டின் உயரிய பதவிகள் வழங்கப்பட்டது.
எங்கள் ஆட்சியின் உலகின் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரமாக நாடக இந்தியா உயர்ந்துள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும் வாழ்த்துக்கள் பெற தகுதியுடையவர்கள் தான் எனக் கூறினார்.
மேலும் பிரதமர் மோடி பேசிக்கொண்டு இருக்கும் போது இடையில் ராகுல் காந்தியை தாக்கி பேசினார். இந்த பாராளுமன்றத்தில் சிலர் கூறினார்கள், இங்கு பூகம்பம் வரும் என்று, ஆனால் கடந்த 5 வருட காலப்பகுதியில் எந்தவித பூகம்பமும் ஏற்ப்படவில்லை எனக் கூறினார்.