காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு வெங்காயம் எங்கே விளையும் என்பது கூட தெரியாது என மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் விமர்சனம்.....
மத்தியப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானின் மகன் பெயர் பனாமா பேப்பர்ஸில் இடம் பெற்றுள்ளதாகவும், அதில் இடம் பெற்ற பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃப் தற்போது சிறையில் உள்ளதாகவும் பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்தியப்பிரதேச பிரச்சாரத்தில் உரையாற்றிய சிவ்ராஜ் சிங் சவுகான் தாங்கள், பனாமா என்றால் என்னவென்றே தெரியாத விவசாயிகள் என்றார். வெங்காயம் மண்ணின் மீது விளையுமா? மண்ணுக்கு அடியில் விளையுமா? என்று கூட ராகுல் காந்திக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.
Rahul Baba doesn’t even know whether onion grows in the soil or above it. He's confused, he says my son’s name came up in Panama papers. We are mere farmers, we don’t even know what Panama is. Can confused people like him run a government?: Madhya Pradesh CM Shivraj Singh Chauhan pic.twitter.com/Bgwdy16Q2t
— ANI (@ANI) November 14, 2018