ராகுல் காந்தி இந்தியா காங்கிரஸ் தலைவர் ஆவார். இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும், இத்தாலியில் பிறந்து தற்போதுவரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த சோனியா காந்திக்கும் மகனாக புது டெல்லியில் பிறந்தார்.
அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் சிறப்புமிக்க முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு ஆவார். அவருடைய முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தனித்துவம் வாய்ந்த தலைவரான மோதிலால் நேரு ஆவார்.
இத்தகைய பெருமை மிக்க குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்தியின் (ஜூன் 19) பிறந்தநாள் இன்று. இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுதும் காங்கிரஸ் தொண்டர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல கட்சி தலைவர்களும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பதிவில்...!
இன்று பிறந்தநாள் காணும் ராகுல் காந்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட காலம் ராகுல் காந்தி வாழ நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பீகாரில் குளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 6 குழந்தைகள் உயிரிழப்பு
Birthday greetings to Congress President Shri @RahulGandhi. I pray for his long and healthy life.
— Narendra Modi (@narendramodi) June 19, 2018