விடுதலை போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்றுகிறார் பிரதமர் - அமித் ஷா புகழாரம்

விடுதலை போராட்ட வீரர்கள் கண்ட கனவினை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிவருகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 15, 2022, 05:29 PM IST
  • 75ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்
  • செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்
  • மோடிக்கு அமித் ஷா புகழாரம்
விடுதலை போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்றுகிறார் பிரதமர் - அமித் ஷா புகழாரம் title=

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனையொட்டி இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் ஒன்பதாவது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். அப்போது நான்கு ஹெலிகாப்டர்களில் இருந்து தேசிய கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியேற்றினார். அதேபோல் நாடு முழுவதும் இருக்கும் அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

Narendra Modi

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றிவருகிறார் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் கலாச்சாரம், எழுச்சிமிகு ஜனநாயக பாரம்பரியம், சாதனைகள் குறித்து பெருமைகொள்ளும் தினம்.நமக்கு சுதந்திரம் வாங்கித்தந்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்காக அனைத்தையும் தியாகம் செய்த நமது துணிச்சல்மிக்க வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்.

 

வலுவான, தன்னிறைவு மிக்க இந்தியா குறித்து நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் கண்ட கனவை, பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்.இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா தருணத்தில் இந்தியாவை மீண்டும் விஸ்வ குருவாக மாற்றுவதற்கு, கடின உழைப்பின் மூலம், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் பங்களிக்க வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க | Amrit Mahotsav: இந்திய விடுதலையில் முக்கிய பங்காற்றிய 5 இடங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News