Karnataka Lok Sabha Election Results 2024: 18வது மக்களவை தேர்தலில் கர்நாடகா மாநிலம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது எனலாம். பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இங்குதான் நேருக்கு நேர் அதிகம் மோதுகின்றன. அதுமட்டுமின்றி, கர்நாடகாவில் தேர்தலை ஒட்டி நடைபெற்ற நேஹா ஹிரேமத் என்ற மாணவி படுகொலை மற்றும் தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிரஜ்வெல் ரேவண்ணா ஆபாச வீடியோ குற்றச்சாட்டுகள் என ஆகியவை காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு சற்று அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பல இடங்களில் கர்நாடகவில் முன்னிலை பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக, சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரஜ்வெல் ரேவண்ணா தற்போது முன்னிலை பெற்றுள்ளார். மாண்டியாவில் முன்னாள் முதல்வர் ஹெச்.டி குமாரசாமி முன்னிலை பெற்றுள்ளார்.
பிரஜ்வெல் ரேவண்ணா விவகாரம்
பிரஜ்வெல் ரேவண்ணா வெற்றி பெறுவார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் தெரிவித்தன. அதற்கு முக்கிய காரணம் ஹசன் தொகுதியில் ஏப். 26ஆம் தேதியே வாக்குப்பதிவு நிறைவுபெற்றுவிட்டது. அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற பின்னர்தான், பிரஜ்வெல் ரேவண்ணா விவகராம் பொதுவெளியில் கசிய தொடங்கியது. இருப்பினும், கர்நாடகாவில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றதால் பிரஜ்வெல் ரேவண்ணா விவகாரம் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில்தான் எதிரொலித்திருக்கும்.
வட மற்றும் மத்திய கர்நாடகாவின் 14 தொகுதிகளில்தான் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 14 தொகுதிகளிலும் கடந்த முறை பாஜகவே வெற்றி பெற்றது. எனவே, பிரஜ்வெல் ரேவண்ணா விவகாரம் வாக்காளர்களிடம் தாக்கம் செலுத்தியிருந்தால், அது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இந்த 14 தொகுதிகளில்தான் பிரச்னையாகும்.
முன்னிலை நிலவரம் என்ன?
இருப்பினும், பாஜக பலமாக காணப்படுவதால் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லலாம் என முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரம் தெரிவிக்கிறது. தற்போதைய நிலவரப்படி என்டிஏ 23 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 4 தொகுதிகளிலும் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ