பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 20) காலை புதுதில்லியில் உள்ள குருத்வாரா ரகாப் கஞ்சிற்கு சென்று வணங்கினார்.
பிரதமர் குரு தேக் பகதூரின் தியாகத்தை போற்றி அஞ்சலி செலுத்தியதுடன், 'அர்தாஸ்' எனப்படும் பிரார்த்தனையிலும் பங்கேற்றார்.
பிரதமர் மோடியின் (PM Narendra Modi) குருத்வாரா ரகாப் கஞ்ச் சென்ற போது போலீஸ் பாதுகாப்பும் இல்லை. பொது மக்களுக்கு போக்குவரத்து தடைகள் எதுவும் இல்லை.
"இன்று காலை, ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்கள் புனிதமான உடல் தகனம் செய்யப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப்பிற்கு நான் பிரார்த்தனை செய்தேன். நான் மிகவும் பாக்கியவானாக உணர்ந்தேன். உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானவர்களைப் போலவே நானும் ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் கருணையால் ஈர்க்கப்பட்டவன்” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
This morning, I prayed at the historic Gurudwara Rakab Ganj Sahib, where the pious body of Sri Guru Teg Bahadur Ji was cremated. I felt extremely blessed. I, like millions around the world, am deeply inspired by the kindnesses of Sri Guru Teg Bahadur Ji. pic.twitter.com/ECveWV9JjR
— Narendra Modi (@narendramodi) December 20, 2020
மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு (Farm Laws) எதிராக விவசாயிகள் 25 வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியின் குருத்வாரா ரகாப் கஞ்ச் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கிடையில், போராட்டத்தின் போது உயிர் இழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 'ஷ்ரதாஞ்சலி திவஸ்', அதாவது அஞ்சலி செலுத்தும் தினமாக அனுசரிப்பார்கள்.
கிராமம் மற்றும் தொகுதிகளில், இறந்தவர்களுக்கு காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை விவசாயிகள் அஞ்சலி செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து பஞ்சாபை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தில்லி எல்லை பகுதிகளில் போராட்டத்தில் (Farmers Protest) ஈடுபட்டு வருகின்றனர்.
ALSO READ | விஸ்ட்ரான் நிறுவனத்திற்கு புதிய ஆர்டர்கள் கொடுக்கப்பட்டாது: ஆப்பிள் நிறுவனம்
மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 25 வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியின் குருத்வாரா ரகாப் கஞ்ச் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.