விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 'ராக்கெட்ரி' திரைப்படம் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் மாதவன்.
அண்மையில் வெளியான 'ராக்கெட்ரி' திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியை (PM Narendra Modi) சந்தித்து 'ராக்கெட்ரி' திரைப்படம் குறித்து பேசியதை தனது ட்விட்டர் கணக்கில் நடிகர் மாதவன் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியான நம்பி நாராயணனை அழிக்கும் நோக்கில், அவருக்கு தேச துரோகி என பட்டம் சூட்டி சிறையில் அடைத்து சித்தரவதை செய்த உண்மை கதையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை தயாரித்து இயக்கி, நடித்துள்ளார் மாதவன். இந்த படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கிறார்.
Happy to have met you and the brilliant Nambi Narayanan Ji. This film covers an important topic, which more people must know about.
Our scientists and technicians have made great sacrifices for our country, glimpses of which I could see in the clips of Rocketry. https://t.co/GDopym5rTm
— Narendra Modi (@narendramodi) April 5, 2021
நம்பி நாராயணனின் பயோபிக் படமான "ராக்கெட்ரி" திரைப்படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 1 அன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரில் இடம் பெற்றுள்ள அனல் பறக்கும் வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. விரைவில் இந்த படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை, ராக்கெட்ரி படத்தின் நிஜ நாயகனான விஞ்ஞானி நம்பி நாராயணனுடன், இணைந்து தான் சந்தித்தாக தனது வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்து நடிகர் மாதவன். பிரதமரிடம் 'ராக்கெட்ரி' திரைப்படத்தின் காட்சிகளை காண்பித்ததாகவும்,
நம்பி நாராயணன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பேசியதாகவும் நடிகர் மாதவன் கூறியுள்ளார். மேலும் சந்திக்க வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த பிரதமருக்கு தனது நன்றியும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை மாதவனும், நம்பி நாராயணனும் சந்தித்துள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் மாதவனுடன் மீண்டும் நடிகை சிம்ரன் இணைந்துள்ளார். இந்த படத்தில் பல ஹாலிவுட் நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ALSO READ | WATCH: "ராக்கெட்ரி" படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ட்ரைலர்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR